Melmaruvathur Adhiparasakthi (Photo Credit: @pattalianand X)

ஆகஸ்ட் 06, மேல்மருவத்தூர் (Chengalpattu News): அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், அன்னையாக போற்றப்படும் பார்வதி தேவி மண்ணில் அவதரித்து பூப்பெய்து, சூல்கொண்டு இருந்ததாகவும் கூற்றுகள் உண்டு. இந்த நிகழ்வை போற்றும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம் (Aadi Pooram 2024) அன்று அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வளைகாப்பு போன்றவை நடத்தப்படும். இந்த நன்னாளில் அம்மனுக்கு வளையல் வாங்கிக்கொடுத்து, கோவிலில் பூஜைக்கு பின்னர் வழங்கப்படும் வலையலகளை பெண்கள் அணிந்துகொண்டால் திருமணம் கைகூடும், குழந்தைபாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு நல்லசெய்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டுக்கான ஆடிப்பூரம் ஆகஸ்ட் 07ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. Aadi Pooram 2024: ஆடிப்பூரம் அம்மன் சிறப்பு வழிபாடு; தேதி மற்றும் வழிபாட்டு முறைகள் என்னென்ன..?

இன்று செங்கல்பட்டில் உள்ளூர் விடுமுறை:

இதனைமுன்னிட்டு தமிழ்நாட்டில் அம்மன் கோவிலில் பிரசித்திபெற்ற ஆலயமாக கவனிக்கப்படும் மேல்வருவத்தூர் (Adhiparasakthi Kovil) ஆதிபராசக்தி கோவிலில் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் குவிந்துள்ளனர். இதனால் இன்று ஒருநாள் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பக்தர்கள் பலரும் மருவத்தூர் கோவிலுக்கு சென்று வர எதுவாக பல பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்து சேவையும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, விடுமுறை தினத்தை ஈடு செய்ய 31 ஆகஸ்ட் 2024 சனிக்கிழமை அன்று பணி நாளாக செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.