ஜனவரி 10, சென்னை (Chennai News): மார்கழி மாதம் தொடங்கி முடியும் திருவாதிரை நட்சத்திரத்தில், திருவாதிரை நாள் ஆருத்ரா தரிசனமாக, நடராஜருக்கு உகந்த நாளாக கவனிக்கப்படுகிறது. திருவாரூர், சிதம்பரம் உட்பட நடராஜர் ஆலயங்கள் உள்ள ஊர்களில் திருவாதிரை பண்டிகை கோலாகலமாக களைகட்டும். 2025ம் ஆண்டுக்கான திருவாதிரை பண்டிகை ஜனவரி மாதம் 13ம் தேதி அன்று சிறப்பிக்கப்படுகிறது. Thiruvathirai 2025: திருவாதிரை களி உருவான வரலாறு தெரியுமா? 2025 திருவாதிரை நல்லநேரம், நாள் விபரம் இதோ.!
திருவாதிரை (Thiruvathirai 2025) நோன்பு:
ஜனவரி மாதம் 12ம் தேதி காலை 11:24 மணிமுதல் ஜனவரி 13, காலை 10:38 வரை நீடிக்கிறது. அன்றைய நாளில் பக்தர்கள் விரதம் இருந்து வழிபடுவதே திருவாதிரை விரதம், திருவாதிரை நோன்பு என அழைக்கப்படுகிறது. மார்கழி பௌர்ணமியும், திருவாதிரை நட்சத்திரமும் ஒன்று சேர்ந்து வரும் நாளில் ஆருத்ரா தரிசனம் எனப்படும் திருவாதிரை சிறப்பிக்கப்படுகிறது. இந்த நாளில் நடராஜருக்கு சிறப்பு ஆராதனை, களி படையலுடன் வழங்கப்படும். திருவாரூர் தியாகராஜர் கோவிலிலும், தியாகராஜரின் பாத தரிசனத்திற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. திருவாதிரை நன்னாளில் பக்தர்களின் வசதிக்காக, வாழ்த்துச் செய்திகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. Arudra Darisanam 2025: நடராஜர் அருளை தரும் ஆருத்ரா தரிசனம்.. வரலாறு, தேதி மற்றும் மகா அபிஷேகம் குறித்த தகவல் இதோ..!
1. திருவாதிரை நன்னாளில் நடராஜனின் நல்லாசி கிடைக்க இறைவனை வேண்டுவோம்!
2. ஆனந்த தாண்டவ நாயகன், எம்பெருமான் சிவனின் அருள் திருவாதிரை நாளில் அனைவருக்கும் கிடைக்கட்டும்!
3. தில்லைவனத்தில் நடராஜனாக எழுந்தருளி, பக்தர்களுக்கு இன்மை புகுத்திடையா எம் ராஜனே!
4. தீமையை அழித்து நன்மையை தரும் நடராஜனே, உம் குழந்தைகளுக்கு அருள் புரிவாயாக!
5. சிவனுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜரின் அவதாரத்தை வணங்கி மேன்மை அடைவோம்!
திருவாதிரையில் இறைவனின் அருள்பெற்று வளமுடன் வாழ ஒவ்வொருவரையும் லேட்டஸ்ட்லி தமிழ் வாழ்த்துகிறது.