Bhogi (Photo Credit: @ANI X)

ஜனவரி 13, சென்னை (Chennai): உலகத்தமிழர்கள் பொங்கல் பண்டிகை, ஜனவரி 14, 2025 அன்று சிறப்பிக்கப்படவுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்பு கொண்டாடப்படும் போகிப்பண்டிகை (Bhogi Festival 2025) ஆம் தேதி தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சிறப்பிக்கப்படும். வீட்டில் இருக்கும் பழைய பொருட்கள், தேவை இல்லாத பொருட்களை புறக்கணித்து, அதனை தீயிலிட்டு கொளுத்துவது போகியின் முக்கிய விஷயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அதனாலேயே போகிப் பண்டிகைக்கு, "பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்ற பழமொழியும் அடிப்படையாக உள்ளது. அணைக்கட்டில் செல்பி எடுத்து குளியல், கொண்டாட்டம்.. நண்பர்கள் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாப பலி.! பெற்றோர்கள் கண்ணீர்.!

மேளம் தாளத்துடன் கொண்டாடப்படும் போகி:

தமிழகத்தில் பழைய பயனற்ற பொருட்களை எரித்து மக்கள் போகி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். போகி பண்டிகையை முன்னிட்டு மேளம் அடித்து பெண்கள், பெரியவர்கள், சிறுவர்கள் உற்சாக கொண்டாடி வருகின்றனர். மேலும் தீப்பந்தங்களைச் சுற்றி பக்திப் பாடல்களைப் பாடி நடனமாடி வருகின்றனர். பழைய பொருட்களை எரிப்பதால் சென்னையில் காற்று மாசு சற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் பொருட்களையே மக்கள் எரித்து வருகிறார்கள். இப்படி செய்ய வேண்டாம் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி வருகிறது.

தமிழகத்தில் போகி பண்டிகை கோலாகலம்: