Astrology (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 17, சென்னை (Chennai News): சனி பெயர்ச்சி 29 மார்ச் 2025 அன்று மீன ராசியில் சனி பூரட்டாதி நான்காம் பாத பிரவேசத்தில் தொடங்கி , 17 மாறுபட்ட நட்சத்திர சாரங்களில் சனி சஞ்சாரம் நிகழ்கிறது சனி பகவான் மீன ராசியில் ஜூன் 3 , 2027 வரை சஞ்சாரம் செய்கிறார். இந்த கால கட்டத்தில் அதாவது 29 மார்ச் 2025 முதல் ஜூன் 3 , 2027 வரை உள்ள காலத்தில் சனி மீனத்தில் சஞ்சாரம் செய்யும் காலத்தில் தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள் பார்க்கலாம்.

தனுசு சனி பெயர்ச்சி பலன்கள் (Dhanush Sani Peyarchi Palan 2025):

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்:

இதுவரை தெளிவாக முடிவு எடுத்துக் கொண்டிருந்தவர்கள் அப்படி முடிவு எடுக்க முடியாமல் குழப்பமான சூழ்நிலை சந்திப்பார்கள். இதுவரை ஒழுங்காகவும் கிடைத்துக் கொண்டிருந்த பல விஷயங்கள் தடை ஆகி குழப்பமாகவும் பயம் வரவழைப்பதாகவும் அமையும். பண விஷயத்தில் ஏமாறுவதற்கு வாய்ப்பு அதிகம். நிரந்தரமான வருமானம் இல்லாமல் தற்காலிக வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு அந்த வேலையும் நின்று போகும் அபாயம் உள்ளது. பெண்கள் அதிக சோதனைகளை சந்திப்பார்கள் அதாவது மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் மண வாழ்க்கையில், அலுவலக வாழ்க்கையில் வியாபார வாழ்க்கையில் அதிகம் சோதனைகளை சந்திப்பார்கள். உடல் நலத்தை பொருத்தவரை சிறுசிறு விபத்துகள் சிறுசிறு காயங்கள் உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது. பொருட்கள் திருட்டு போவது வாகனங்கள் திருட்டுப் போவது மதிப்பு மிகுந்த பொருள் தொலைந்து போவது போன்றவை நடக்கும். நம்பிக்கையான நண்பர்களும் மனம் மாறி ஏமாற்றுவார்கள் அல்லது உதவி செய்யாமல் இழுத்தடிப்பார்கள். ஆகவே மிகவும. கவனத்துடன் இருக்க வேண்டும். கொடுத்த கடன் வசூலாகாது தவிர மேலும் கடன் கொடுத்து நஷ்டம் ஆவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. Sani Peyarchi Palan 2025: சனிப் பெயர்ச்சி 2025: விருச்சிகம் ராசிக்கு ஏழரை சனி எப்படி இருக்கப் போகுது தெரியுமா? விபரம் உள்ளே.!

கணவன் மனைவி உறவிலும் ஏனைய உறவுகளிலும் அடிக்கடி மனஸ்தாபங்கள் உருவாகி மன அமைதி கெட்டுப் போகும். அதிகமாக யோசிக்க வேண்டிய விஷயத்திலும் யோசிக்க முடியாமல் குழப்பம் ஏற்படுவதால் தவறான முடிவுகள் எடுப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது ஆகவே பெரிய முதலீடுகள் சொத்து வாங்குதல் திருமணம் தொடர்பாக முடிவு எடுத்தல் வழக்கு போலீஸ் விஷயங்களில் முடிவெடுத்தல் போன்றவற்றை கவனமாக செய்ய வேண்டும் .இந்த விஷயங்களை நம்பிக்கை கொண்ட நண்பர்களிடம் யோசனை கேட்பதை தவிர்க்கலாம் காரணம் நட்பு விரிசல் ஆவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது யாராவது நண்பரின் யோசனையைக் கேட்டு அந்த காரியம் தவறாக முடிந்து விட்டால் அந்த நண்பருடன் உறவு முறிந்து போகும் அபாயம் உள்ளது. சனிப்பெயர்ச்சியின் தொடக்க காலத்தில் அதிக சிக்கல்களை மூலம் நட்சத்திர அன்பர்கள் சந்தித்தாலும் சனிப்பெயர்ச்சியின் இறுதி காலத்தில் நிவாரணம் அதிகம் கிடைக்கும் இழந்த பொருள்கள் மீண்டு வரும் அல்லது புதிய வாய்ப்புகள் உருவாகி மனதுக்கு ஆறுதல் தருவதாக அமையும்.

ரேவதி நட்சத்திர சாரத்தில் சஞ்சாரம் செய்யும் போது மூலம் நட்சத்திர அன்பர்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும். சொத்து சேரும் வாகனம் வசதி போன்றவை அதிகமாக பெருகி மன நிம்மதி கிடைக்கும். வேலை இழந்தவர்கள் வேலை வாய்ப்பை பெறுவார்கள். அதுவும் நல்ல வேலையாக அமையும். இந்த காலகட்டத்தில் மூலம் நட்சத்திர அன்பர்களுக்கு வருமானத்தில் உயர்வு கிடைக்கும் சொத்து வாங்குவதற்குரிய நல்ல நேரமாக இந்த காலத்தை எடுத்துக் கொள்ளலாம் அதாவது சனி ரேவதி நட்சத்திர சாரத்தில் சஞ்சாரம் செய்யும் போது மட்டும். அதற்கு முன்பு அதாவது பூரட்டாதி உத்திரட்டாதி சாரத்தில் சனி சஞ்சாரம் செய்யும் போது சொத்து வாங்குவதை தவிர்க்கலாம். மூல நட்சத்திரம் சார்ந்த நண்பர்களுக்கு தாய் தந்தையர் உடல் நலத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய காலம் இந்த சனி பெயர்ச்சி காலம்.

தனுசு ராசி பூராடம் நட்சத்திர அன்பர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்:

சனி பெயர்ச்சிக்கு ஒரு மாதம் முன்பு எக்ஸ்பிரஸ் வேகத்தில் காரியங்கள் சாதகமாக நடப்பதை பார்க்கலாம். .ஆனாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் .மிகவும் சாதகமாக நடக்கிறது என்ற அலட்சியமாக இருந்து விடாமல் கிடைக்கும் பலனை நல்லவிதமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மிக முக்கியமாக புதிய வேலைக்கான வாய்ப்புகள் உருவாகும். அப்படி உருவாகும் வாய்ப்புகளை அலசி ஆராய்ந்து பார்த்து ஏற்றுக் கொள்ள வேண்டும் .ஒன்றுக்கு மேலாக பல வேலை வாய்ப்புகள் ஒரே சமயத்தில் வந்து திக்கு முக்காட வைக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தடைப்பட்டு நின்ற பல விஷயங்கள் தடை நீங்கி வேகமாக முன்னேற்றம் காண்பதை பார்க்கலாம். இதில் திருமண தடையும் அடங்கும். திருமண தடை நீங்கி திருமண பாக்கியம் அமையும்.

காண்ட்ராக்ட் வொர்க் போன்ற வேலை எடுத்து செய்பவர்கள் தடைப்பட்டு நின்ற பல ப்ராஜெக்ட் வேகமாக முன்னேறி லாபத்தை ஈட்டி தருவதாக இருக்கும். பார்ட்னர்ஷிப் கூட்டுத் தொழில் போன்ற விஷயங்களில் ஈடுபடுபவர்கள் லாபகரமாக செய்வதற்கு வாய்ப்பு அதிகமாக கைகூடி வரும். நம்பிக்கைக்கு உரியவர்கள் தொழில் சேர்ந்து செய்து தொழில் சிறக்கும். புதிய நட்புகள் மூலம் பணவரவும் லாபமும் கிடைக்கும். புதிய நட்புகள் சொல்லும் ஆலோசனைகள் இதுவரை வாழ்க்கை இருந்த பல சிக்கல்களை தீர்ப்பதாக சிக்கல் தீர்வதற்கு உதவுவதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நல்ல முன்னேற்றம் அடையும் நீண்ட நாள் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்க வலிகள் மறைந்து நிவாரணம் கிடைக்கும். மாணவர்களுக்கு மிகவும் அனுகூலமான காலம் என்று சொல்லலாம்.போட்டித் தேர்வுகளில் வெற்றி, எந்த முயற்சியிலும் வெற்றி என்று அழுகூலமான காலமாக பூராடம் நட்சத்திர அன்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி காலம் காட்டுகிறது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ,பண உதவி சுலபமான முயற்சியில் கிடைக்கும் தெய்வ பக்தி அதிகரித்து கோவில் காரியங்கள் தர்ம காரியங்கள் செய்வதில் ஈடுபடுவீர்கள். இந்த சனி பெயர்ச்சி பூராடம் நட்சத்திர அன்பர்களுக்கு அதிக அளவு நன்மை செய்வதாக அமைந்திருக்கிறது.

தனுசு ராசி உத்திராடம் முதல் பாத அன்பர்களுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்:

கண்ணை கட்டி காட்டில் விட்டது போன்ற காலம் திக்கு திசை தெரியாமல் பிரச்சனைகள் ஒன்றுக்கு பலவாக வந்து தொந்தரவு செய்யும். நண்பர்கள் பகைவர்கள் ஆவார்கள். உறவுகள் பிரிந்து போய் அதிக சிக்கலை உண்டாக்கும்.வழக்கு எதுவும் இருந்தால் இப்போது எந்த முடிவும் எடுத்துக் கொள்ளாமல் தள்ளிப் போடுவதற்கு பாருங்கள். காரணம் வழக்கு உங்களுக்கு விரோதமாக தீர்ப்பு ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. வேலையில் தொந்தரவு இருந்தாலும் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாக இருக்க பாருங்கள். உங்கள் யோசனை நல்ல யோசனையாக இருந்தாலும் வேலை பார்க்கும் இடத்தில் அதற்கு மதிப்பு இருக்காது. ஆகவே யோசனை சொல்லி அவமானப்படுவதை காட்டிலும் அமைதியாக இருந்து விடுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் உங்களை புரிந்து கொள்ளாத பலருடன் சேர்ந்து வேலை பார்க்கும் தர்ம சங்கடமான நிலை தான் நீடிக்கும்.

சனி பெயர்ச்சி இரண்டாவது கட்டத்தில் அது சனி உத்திரட்டாதி சாரத்தில் பயணம் செய்யும்போது இதுவரை இருந்து வந்த கஷ்டங்களிலிருந்து மூச்சு விடும் அளவிற்கு நிவாரணம் கிடைக்கும். சிக்கலாகி இருந்த பல விஷயங்களில் தீர்வு கிடைத்து மன அமைதி திரும்பும், சனி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் போது உத்திராடம் நட்சத்திரம் முதல் பாத அன்பர்கள் சில ஆழமான அனுகூலங்களை பெறுவார்கள். மிகக் குறிப்பாக பிரித்து போய் இருந்த உறவுகள் மன சங்கடம் கொண்டிருந்த உறவுகள் இவர்களிடம் அனுகூலமான தன்மை காணப்பட்டு குற்றம் குறைகளை மறந்து சகஜமான நிலைமைக்கு திருப்புவார்கள். சனி ரேவதி சாரத்தில் பயணம் செய்யும்போது பகை உணர்வுகள் மேலோங்கி சச்சரவு செய்யும் எண்ணம் மிகையாக இருக்கும் ஆகவே வாக்குவாதம் ஏதேனும் ஈடுபட வேண்டாம் மேலும் இந்த காலகட்டத்தில் அதாவது ரேவதி சாதத்தில் சனி இருக்கும்போது கடன் வாங்குதல் போன்றவற்றை தவிர்க்கலாம் வில்லங்கமான சொத்துக்கள் மிகக் குறைந்த விலையில் கைகூடி வருவது போல் காணப்படும் ஆனால் அப்படியான வாய்ப்புகளை அவசியம் தவிர்க்கவும்.

கல்வியால் தான் வாழ்க்கையில் வெற்றி என்ற நிலையில் இருப்பவர்கள் சனி பூரட்டாதி சாரத்தில் சஞ்சாரம் செய்யும்போது அனுகூலமான தன்மையை அடைவார்கள் அதேசமயம் சனி உத்திரட்டாதி சாதத்தில் பயணம்செய்யும் போது என்னவென்று புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு சங்கடங்களை சந்திப்பார்கள். சனி உத்திரட்டாதி சாரத்தில் பயணம் செய்யும் போது சிலருக்கு உயர் பதவிகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது ஆனால் அந்தப் பதவி வாய்ப்புகளும் மிகுந்த சோதனையான காலகட்டமாக இருக்கும் சக்திக்கு மீறிய வேலைகளை செய்ய வேண்டிய அவசியம் இருக்கும். தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் முதல் பாத அன்பர்கள் உழைப்பை அதிகம் நம்பித்தான் ஆக வேண்டும் பிறருடைய வேலைகளும் உங்கள் தலை மேல் பாரமாக வந்துவிடும், பலர் தட்டிக் கழித்த பொறுப்புகள் உங்கள் கைக்கு வந்து சேரும் அதனை நல்லவிதமாக செய்து கொடுத்தால் உங்களுக்கு அனுபவமும் பயனும் கிடைக்கும் ஆனால் இந்த வேலை வாய்ப்புகள் எதுவுமே நேரடியாக உங்களுக்கு அனுகூலமாக தெரியாது ஆழமாக யோசித்துப் பார்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். சின்ன விஷயங்கள் தொந்தரவு செய்வதை தவிர உடல்நலத்தில் பெரிய அளவில் பின்னடைவு எதுவும் இருக்காது என்று சொல்லலாம்.