ASTRO (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 14, சென்னை (Chennai News): சனி பெயர்ச்சி 29 மார்ச் 2025 அன்று மீன ராசியில் சனி பூரட்டாதி நான்காம் பாத பிரவேசத்தில் தொடங்கி , 17 மாறுபட்ட நட்சத்திர சாரங்களில் சனி சஞ்சாரம் நிகழ்கிறது சனி பகவான் மீன ராசியில் ஜூன் 3 , 2027 வரை சஞ்சாரம் செய்கிறார். இந்த கால கட்டத்தில் அதாவது 29 மார்ச் 2025 முதல் ஜூன் 3 , 2027 வரை உள்ள காலத்தில் சனி மீனத்தில் சஞ்சாரம் செய்யும் காலத்தில் விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள் பார்க்கலாம். Sani Peyarchi Palan 2025: சனிப் பெயர்ச்சி 2025: துலாம் ராசிக்கு ஏழரை சனி எப்படி இருக்கப் போகுது தெரியுமா? விபரம் உள்ளே.!

விருச்சிகம் சனி பெயர்ச்சி பலன்கள் (Viruchikam Sani Peyarchi Palan 2025):

சனி பகவான் தற்போது குரு வீடான மீனத்திற்கு ஐந்தாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். உங்கள் உத்தியோகம் தொழில் வாழ்க்கையில் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்த பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில் மேம்படும் கவனமும் பொறுப்பும் உங்கள் தொழிலை விரிவடையச் செய்யும். கடினமான உழைப்பு வெற்றியை கொடுக்கும் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல காத்திருந்தவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் சனியின் பார்வை விழுவதால் கணவன் மனைவி உறவில் கவனம் தேவை விட்டுக் கொடுத்துப் போவதும் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் அமைதியாக இருப்பதும் தம்பதியரின் உறவை மேம்படுத்தும்.

நிதிநிலை சீராக இருக்கும் தேவைகள் அனைத்தும் நிறைவேறும் இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் கையில் தேவையான அளவு பணப்புழக்கம் இருக்கும் தொழில் மூலம் லாபம் பெறுவீர்கள் கடன்கள் அடைக்கப்படும். மாணவர்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். கவனச் சிதறல்கள் இல்லாமல் படிப்பில் கவனம் செலுத்துங்கள் விடாமுயற்சி வெற்றியை கொடுக்கும். வெளிநாடு சென்று படிக்க வாய்ப்புகள் உருவாகும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை சிறிய உடல் உபாதைகளை கூட மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது.உணவில் கவனம் செலுத்துவது நல்லது மது அருந்தும் பழக்கம் உடையவர்கள் அதை குறைத்துக் கொள்வது நல்லது உடற்பயிற்சி மேற்கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இந்த சனி பெயர்ச்சி காலம் விருச்சிக ராசியினருக்கு ஏற்றத்தாழ்வுகளை கொண்ட கலவையான பலன்களை பெறுவார்கள்.