ஜனவரி 26, புதுடெல்லி (New Delhi): இந்திய தாய்த்திருநாட்டின் அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 76 வது ஆண்டு விழா, இன்று 76 வது குடியரசு தினமாக (76th Republic Day) சிறப்பிக்கப்படுகிறது. ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு இருந்த இந்தியா 15 ஆகஸ்ட் 1947 அன்று, நள்ளிரவு நேரத்தில் விடுதலை அடைந்தது. இந்தியாவின் தேசத்தந்தை என போற்றப்படும் மகாத்மா காந்தி எடுத்த தொடர் அரவழிப்போராட்டம், பல சுதந்திர போராட்ட வீரர்களின் உடல் தியாகத்தால் இந்தியா இன்று சுதந்திர காற்றை சுவாசித்து வருகிறது. இந்திய குடியரசு தினம் 2025 (Republic Day 2025) இன்று, 26 ஜனவரி 2025 அன்று சிறப்பிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கூகுள் நிறுவனம், இந்திய சுதந்திர தினத்திற்காக தனது சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. அது உங்களின் பார்வைக்கும் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மும்பை, புனே பகுதியைச் சேர்ந்த ரோஹன் டாஹோதரே (Rohan Dahotre) என்ற நபரால் இன்றைய டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் விலங்குகள், வாத்திய அணிவகுப்புடன் பயணம் செய்வது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. Republic Day 2025: "வேற்றுமையில் ஒற்றுமையும் பன்முக கலாச்சாரமும்" 76-வது இந்திய சுதந்திர தினம் - அழகான குடியரசு தின வாழ்த்துச்செய்தி இதோ.!
குடியரசு தினத்தை முன்னிட்டு கூகுளின் சிறப்பு டூடுல் (Google Doodle for 76th India Republic Day 2025):
India Republic Day 2025
Google Doodle Today #LatestLY_Tamil | #India | #RepublicDay2025 pic.twitter.com/NhNXaMCcw8
— Sriramrpckanna (@Sriramrpckanna1) January 26, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)