TN Govt Logo | Job Scam (Photo Credit: Wikipedia / Pixabay).jpg

ஜனவரி 24, சென்னை (Chennai News): சமூக வலைத்தளங்கள் வாயிலாக அறிமுகமாகும் நபர்கள், வங்கிகள், அரசுத்துறை அதிகாரிகள் என தொடர்புகொண்டு நேரடியாக ஒடிபி கேட்கும் நபர்களிடம் நமது தனிப்பட்ட தகவல் அல்லது பிற விபரங்களை தெரிவித்தால், அவர்கள் மோசடி செயல்களில் ஈடுபட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதுபோன்ற மோசடிகள் முன்னதாகவே அரங்கேறி இருந்தாலும், அது குறித்து உரிய விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. தமிழக கபாடி வீராங்கனைகள் மீது பஞ்சாபில் தாக்குதல்; போட்டியில் வாக்குவாதம் முற்றி பயங்கரம்.! 

பெற்றோரே அழைப்பு வந்தா நம்பாதீங்க:

மக்களிடம் அதிகளவிலான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும், மோசடிகள் புதுப்புது வழிகளில் தொடருகிறது. இதனிடையே, பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வந்துள்ளது எனக்கூறி, தமிழ்நாடு முழுவதும் 12ம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களை குறிவைத்து, இணையவழியில் மோசடி நடப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும், கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் பெற்றோருக்கு தொடர்பு கொண்டு வங்கிக்கணக்கு விபரம், ஓடிடி போன்றவற்றை கேட்டு பணம் எடுக்க முயற்சிகள் நடந்துள்ளது.

புகார் அளிக்க கோரிக்கை:

இதனால் பள்ளிக்கல்வித்துறை பெயரில் யாரேனும் தொடர்புகொண்டால் பதில் அளிக்காமல், காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு தமிழ்நாடு பள்ளிக்கவழித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், மோசடியாளர்கள் கல்வி உதவித்தொகை பெறுவோரை மட்டும் குறிவைத்து இவ்வாறான செயல்கள் தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளன.