Tata Steel Chess 2025 (Photo Credit: @Jesse_Feb X)

ஜனவரி 27, விஜ்க் ஆன் ஜீ (Sports News): நெதர்லாந்தில், டாடா ஸ்டீல் செஸ் 87வது சீசன் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் (Tata Steel Chess) போட்டியில், வைஷாலி ரமேஷ்பாபுவுடன் கைகுலுக்க மறுத்த உஸ்பெகிஸ்தான் கிராண்ட்மாஸ்டர் நோடிர்பெக் யாகுபோவ் (Nodirbek Yakubboev) வீடியோ காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உஸ்பெகிஸ்தான் கிராண்ட்மாஸ்டர் நோடிர்பெக் யாகுபோவ், தற்போது உலக சாம்பியனான டி குகேஷ் மற்றும் ஆர் பிரக்ஞானந்தாவுடன் இணைந்து போட்டியின் கூட்டுத் தலைவராக உள்ளார்.  Tata Steel Chess 2025: டாடா ஸ்டீல் செஸ் 2025; டிராவில் முடிந்த குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா ஆட்டம்..!

விளக்கமளித்த உஸ்பெகிஸ்தான் கிராண்ட்மாஸ்டர்:

இந்நிலையில், வைஷாலி ரமேஷ்பாபுவுடன் (Vaishali Rameshbabu) கைகுலுக்க மறுத்தற்கு விளக்கமளித்துள்ளார். அதில், "அன்புள்ள செஸ் நண்பர்களே, வைஷாலியுடன் விளையாட்டில் நடந்த சூழ்நிலையை நான் விளக்க விரும்புகிறேன். பெண்கள் மற்றும் இந்திய செஸ் வீரர்களுக்கு உரிய மரியாதையுடன், மத காரணங்களுக்காக மற்ற பெண்களை நான் தொடுவதில்லை என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று நோடிர்பெக் யாகுபோவ் அவரது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டார். இந்தியாவின் செஸ் வீராங்கனைகளாக வைஷாலியையும் அவரது சகோதரரையும் நான் மதிக்கிறேன். என் நடத்தையால் நான் அவரை புண்படுத்தியிருந்தால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என மேலும் தனது நிலைப்பாட்டை விளக்கி கூறினார்.

வீடியோ இதோ:

விளக்கம் கொடுத்த உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர்: