ஜனவரி 27, பெரம்பூர் (Chennai News): சென்னையில் உள்ள பெரம்பூர் (Perambur) பகுதியில் 12 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். அங்குள்ள பள்ளியில் பயின்று வருகிறார். இதனிடையே, கடந்த ஜனவரி 24, 2025 அன்று, சிறுமி தனது தோழியின் உறவினருக்கு திருமணம் நடைபெறுவதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். பின் மீண்டும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர், ஜனவரி 25 அன்று திருவிக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பெரம்பூரில் அதிர்ச்சி சம்பவம்:
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிறுமி மாயமானது தொடர்பாக விசாரணையை முன்னெடுத்தனர். மேலும், சிறுமி கூறிய பெண் தோழியின் வீட்டிற்கு சென்றபோது, அங்கு பெண் தோழியும் மாயமானது உறுதி செய்யப்பட்டது. இதனால் மாயமான சிறுமிகளை அதிகாரிகள் தேடி வந்த நிலையில், இறுதியாக பெற்றோருக்கு தொடர்புகொண்ட சிறுமிகள், தாங்கள் பெரம்பூரில் இருக்கிறோம் என தெரிவித்துள்ளனர். மருதமலை திரைப்பட பாணியில் சம்பவம்.. பேஸ்புக்கில் திருமண போட்டோ வெளியாகி விசாரணையில் பகீர்.!
பாழடைந்த கட்டிடத்தில் பலாத்காரம்:
இதனால் சிறுமிகளின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, அது ஸ்விச் ஆப் என வந்தது. சைபர் கிரைம் அதிகாரிகள் உதவியுடன் ஸ்மார்ட்போனின் இருப்பிடம் தேடப்பட்ட நிலையில், பெரம்பூரில் இருக்கும் பாழடைந்த தோட்டம் ஒன்றின் கட்டிட பகுதியை காண்பித்துள்ளது. அங்கு விரைந்த அதிகாரிகளுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, அந்த கட்டிடத்தில் மொத்தமாக 6 ஆண்கள், 3 சிறுமிகள் இருந்துள்ளனர். இவர்கள் மூவரும் தோழிகள் ஆவார்கள்.
6 பேர் கைது, 3 சிறுமிகள் மீட்பு:
சிறுமிகள் மூவரையும், அவர்களின் நண்பர்கள் & காதலர்கள் என கூறப்படும் 3 பேர் பலாத்காரம் செய்துள்ளனர். எஞ்சிய 3 பேர் நிகழ்வை வேடிக்கை பார்த்ததாகவும் கூறப்படுகிறது. சிறுமிகள் தங்களின் காதலர்களால் பலாத்காரம் செய்யப்பட்டதும் உறுதியானது. இதனால் அபிஷேக், கலீமுல்லா, 3 சிறார்கள் என மொத்தமாக 6 பேரின் மீது போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவர்களில் அபிஷேக் மீது ஏற்கனவே காவல் நிலையத்தில் ஒரு வழக்கு இருப்பதும், கலீமுல்லா மீது 11 வழக்குகள் இருப்பதும் உறுதியானது.
இவர்கள் எதன்பேரில் நண்பர்கள் ஆகினர்? கட்டிடத்தில் நடந்தது என்ன? என அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.