
ஜனவரி 28, சென்னை (Chennai News): தனிமனித வாழ்க்கையில் இன்றளவில் மிகப்பெரிய பேசுபொருளாக உண்டாகி இருப்பது தனிமை. இன்றளவில் உள்ள இளைஞர்கள், இளைஞிகள் தனிமை என்ற வார்த்தையை சமீபகாலமாக அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். தனிமையால் தவிக்கிறேன் என இன்ஸ்டா, பேஸ்புக், வாட்சப் போன்ற சமூக பக்கங்களில் ரீல்ஸ் வீடியோவும் பகிர்கின்றனர். இவர்கள் விருப்பப்பட்டு தனிமையை தேர்வு செய்யவில்லை எனினும், அவர்களின் சூழ்நிலை காரணமாக தனிமையை தேர்ந்தெடுக்கின்றனர். தனிமை மரணத்தை நேரடியாக கொடுத்துவிடாது எனினும், தனிமையில் இருப்பவர்கள் இயல்பை விட முன்பே மரணத்தை சந்திக்கலாம். தனிமை இறப்பு விகிதத்தை அதிகரிக்கவும் காரணியாக அமைந்துள்ளது என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
தனிமையில் கிடைக்கும் இளம் தலைமுறை:
தனிமையின் அறிகுறியாக நட்பாக பழகும் நபர்கள் இல்லாதது போன்ற உணர்வு, நாம் ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறோம் என்ற உணர்வு, குடும்பம் & உறவினர்களுடன் தொடர்பு துண்டிக்கப்பட்ட உணர்வு, நட்பு வட்டாரமே நமக்கு இல்லை என்று, இருக்கும் வட்டாரத்தரையும் குறைத்துக்கொள்வது போன்ற உணர்வு, உரிமையுடன் பேச, விளையாட நபர்கள் இல்லை என்ற உணர்வு இருப்பவர்கள், பணியிடம், படிப்பு, தொழில் என குடும்பம் மற்றும் நட்பினை பிரிந்து தனிமையில் வசிக்கிறார்கள். நீரை குடம், கேனில் எத்தனை நாள் பிடித்து வைத்து பயன்படுத்தலாம்? இல்லத்தரசிகளே கவனம்.. டிப்ஸ் இதோ.!
தனிமையால் ஏற்படும் பிரச்சனைகள்:
கடந்த காலங்களில் முதுமையில் துணையை இழந்தவர்கள், குழந்தைகளை பிறந்து வாழ்ந்து வருபவர்கள் தனிமையில் இருந்த நிலைகள் என்பது மாற்றம் அடைந்து, இளம் தலைமுறை தனிமையை எதிகொள்கிறது. இப்படியாக தனது மீது அன்பு, அக்கறை செலுத்தும் நபர்களிடம் பிரிந்து வாழ்வது மனரீதியான துயரம், அசௌகரியம், தூக்கமின்மை போன்றவற்றை உணர்த்துகிறது. நீண்ட காலமாக அனுபவிக்கப்படும் தனிமை மனரீதியான ஆரோக்கியத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்குகளை ஏற்படுத்தும். தனிமையின் மனசோர்வு மனரீதியான பிரச்சனைக்கு வழிவகை செய்யும். தனிமையில் அதிகம் இருப்போர் மறதியை அனுபவிப்பார்கள். இதனால் அல்சைமர் நோய் ஏற்படும். அதற்கான வாய்ப்பும் இரண்டு மடங்கு அதிகரிக்கும். நாட்பட்ட தனிமைக்கு ஆட்பட்டு இருப்பது, மனஅழுத்தத்தை உண்டாக்கும். ஹார்மோனின் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் தூக்க சுழற்சி பாதிக்கப்பட்டு, உடல் பலவீனமாகும்.
தனிமை உணர்வை தவிர்க்க செய்ய வேண்டியது:
தனிமை மற்றும் அதுசார்ந்த சூழலை தவிர்க்க தொலைதூரத்தில் இருக்கும் நபரிடமும் செல்போன், வீடியோ கால் வாயிலாக உரையாற்ற வேண்டும். 10 நிமிடம் பேசினாலும், அன்பார்ந்த உரையாடல் மனதை அமைப்படுத்தப்படுத்தும். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் நீங்கள் உங்களுக்கு பிடித்ததாக மாற்றி செயல்பட வேண்டும். தனிமையில் இருந்தாலும், அதனை கண்டுகொள்ளாமல் வேலைகளில் கவனத்தை செலுத்துங்கள். தனிமையை விரட்ட இசைக்கு முக்கிய பங்கு உண்டு. ஆகையால், கவனசிதறலை தடுக்கும் விதமாக, உங்களின் மனதுக்கு இதமான பாடலை கேட்டு மகிழுங்கள். அறைக்குள், வீட்டுக்குள் முடங்கி இருக்காமல் அலுவலகம், தொழில், படிப்பு, நடைப்பயிற்சி என அவ்வப்போது வெளியே சென்று வாருங்கள். இயற்கை எழிலில் நிறைந்த பூங்கா போன்றவற்றுக்கு சென்று வாருங்கள். உங்களின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபடுங்கள். செல்லப்பிராணிகளை வளர்த்து உங்களின் நேசத்தை காண்பியுங்கள். உங்களின் உணர்ச்சிகளை உங்களின் அன்புற்குரிய நபர்களுடன் பகிருங்கள்.