Vinayagar Chathurthi (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 27, திட்டக்குடி (Spiritual News): Ganesh Chathurthi Wishes WhatsApp Status Messages, HD Wallpapers, Quotes and SMS To Share on Vinayagar Chathurthi 2024: தமிழர்களின் வாழ்வியலில் தொன்றுதொட்டு வணங்கப்பட்டு வரும் விநாயகரை (Vinayagar) நம்மால் எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. எந்த காரியத்தை தொடங்கினாலும் மஞ்சள் அல்லது மாட்டுச் சாணத்தில் கூம்பு வடிவில் விநாயகரை (Ganesha) பிடித்துவைத்து வழிபாட்டு அக்காரியத்தை தொடங்குவது நம் வழக்கம். இதனால் அக்காரியம் வெற்றி அடையும் என்பது தமிழர்களின் மிகப்பெரிய நம்பிக்கைகளில் ஒன்று. இந்தியா, நேபாளம், மலேஷியா, தாய்லாந்து, சிங்கப்பூர், மொரிஷியஸ் என பல நாடுகளில் விநாயகர் வழிபாடு என்பது நடைமுறையில் இருக்கிறது. கணேச புராணம், விநாயக கவசம், விநாயகர் அகவல் ஆகிய நூல்களில் விநாயகர் பற்றிய முழு விபரங்களும் இருக்கின்றன. தமிழர்களின் முன்னோடியாகவும், பெண் புலவர்களில் முக்கியமானவருமான ஒளவையாரும் விநாயகர் குறித்து கூறி இருக்கிறார். அதாவது, விநாயகர் அவதரித்த திதி நாளை விநாயகர் சதுர்த்தியாக (Vinayagar Chathurthi) நாம் கொண்டாடுகிறோம். Vazhaithandu Poriyal Recipe: வாழைத்தண்டு பொரியல் சுவையாக செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

விநாயகர் சதுர்த்தி (Ganesh Chathurthi) வரலாறு:

சிவன் ஒருநாள் வெளியே சென்றிருந்த நேரத்தில், பார்வதி குளிக்கச் சென்றபோது தனது காவலுக்கு யாரும் இல்லாத காரணத்தால், தன் நீராட்டில் இருந்த சந்தன குழம்பை முக்கோண வடிவிலான உருவமாக்கி, அனுகிரத்தின் வாயிலாக உயிர்வழங்கி இருந்தார். உயிர்பெற்ற பிள்ளை அன்னையின் புதல்வனாகியது. அன்னை பாரவ்தியின் சொல்லை தட்டாத பிள்ளையாக இருந்த விநாயகர், அன்னையின் பேச்சுக்கிணங்க யாரையும் உள்ளே விடாமல் பார்த்துக்கொண்டார். அச்சமயம் சிவபெருமான் வந்தாலும், அவருக்கும் பிள்ளையார் அனுமதி மறுத்தார். இதனால் ஆவேசமான சிவன் விநாயகரின் தலையை வெட்டிவிட, ஆத்திரமடைந்த தேவி உச்சகட்ட கோபத்தில் மகாகாளியாக உருப்பெற்றார். காளியான தேவி மூவுகளில் கண்ணில் பட்டதையெல்லாம் அழிக்க தொடங்க, தேவர்கள் சிவனிடம் மன்றாடியதன் பேரில், வடதிசைக்கு சென்று தென்திசை நோக்கி தலை வைத்து உறங்கும் முதல்ல ஜீவராசியின் தலையை வெட்டி வருமாறு ஆணையிட்டார். தேவர்களும் வடதிசை நோக்கி பயணித்தபோது யானை சிவனின் வாக்குகேற்ப படுத்து உறங்கியது. இதனால் யானையின் தலையை வெட்டி சிவனிடம் கொடுக்க, பிள்ளையாரின் உடலுடன் யானைத் தலை இணைக்கப்பட்டு உயிர்கொடுக்கப்பட்டது. இதனால் சமாதானம் அடைந்த அன்னை பார்வதி அமையாகினார். அவருக்கு கணேசன் என பெயர்சூட்டி, தேவர்களுக்கு தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இதுவே விநாயகரின் அவதார புராணத்தின் இரத்தின சுருக்கம் ஆகும். சுக்கிலபட்ச சதுர்த்தி அன்று நடந்த இந்த நிகழ்வே, பின்னாளில் விநாயகர் சதுர்த்தி தினமானது. இந்த தகவல் நாரத புராணத்தில்’தெரிவிக்கப்பட்டுள்ளது. Krishna Janmashtami 2024: தமிழகம் முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்.. குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு மகிழ்ச்சி..!

பிற வரலாற்று குறிப்புகள்:

இந்துக்களின் நம்பிக்கைப்படி, ஆதி தெய்வங்களில் முக்கியமான தெய்வமாக கருதப்படுபவர் விநாயகர். சிவன் - பார்வதி ஆகியோரின் இரண்டாவது மகனான விநாயகர், முக்தியை வழங்கக்கூடிய பலன் பெற்றவர் என்பது ஆன்மீக நெஞ்சங்களின் நம்பிக்கை. அதனாலேயே அவர் முக்தியை தருபவர் எனவும் அன்போடு அழைக்கப்படுகிறார். ரிக் வேதங்களின்படி இந்து மதத்தை பின்பற்றிய மக்களுக்கு முக்கிய கடவுளாக இருக்கும் விநாயகர், அன்போடு வந்து தன்னை மனமுருகி வேண்டுவோருக்கு வரங்களை அள்ளித்தரும் கொடைவள்ளலாகவும், வம்பென்று வருவோருக்கு தக்க பாடம் புகட்டும் ஆசானாகவும் இருந்து இருக்கிறார். கிமு 3ம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முந்தைய படைப்புகளிலும், கிபி 2ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் முதல் விநாயகர் குறித்த தகவல்கள் கிடைத்தாலும், கிமு 3ம் நூற்றாண்டு வரை கண்டறியப்பட்ட பழங்கால குகைகளில் விநாயகரின் உருவம் பொறித்த பல்வேறு சிற்பங்கள் இருக்கின்றன. இது விநாயகரை தொன்றுதொட்டே பழங்கால தெய்வம் என்பதை உறுதி செய்கிறது. ஞானம், செழிப்பு, அதிஷ்டத்தை முக்கிய அம்சமாக கருதப்படும் விநாயகர் கோவில்கள், ஒவ்வொரு ஊரிலும் ஏராளமாக இருக்கின்றன. கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக விநாயகர் சதுர்த்தி என்பது வெகுவிமர்சையாக இந்தியா மட்டுமல்லாது உலகெங்கும் வாழும் இந்துக்களால் சிறக்கப்படுகிறது. Birds Astrology: அடடே.. உங்களின் வீட்டிற்குள் இந்த பறவையெல்லாம் வந்துட்டு போகுதா?.. விஷயம் இதுதானாம்.!

விநாயகர் சதுர்த்தி 2024:

அந்தவகையில், 2024 விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் மாதம் 07ம் தேதி சனிக்கிழமை அன்று சிறப்பிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு ஒவ்வொரு கிராமத்திலும், தெருவிலும் விநாயகர் சிலைகள் வைத்து மக்கள் வழிபாடு செய்து வருவார்கள். செப்டம்பர் 07ம் தேதி காலை 11:03 மணிமுதல் மதியம் 01:29 வரை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் பக்தர்கள் ஈடுபடலாம். காலை 07:45 மணிமுதல் 08:45 மணிவரையிலும், மாலை 04:30 மணிமுதல் 05:00 மணிவரையிலும் நல்ல நேரமாகவும் கணிக்கப்பட்டுள்ளது. கௌரி நல்ல நேரமாக காலை 10:45 மணிமுதல் 11:45 மணிவரையிலும், மாலை 09:30 மணிமுதல் 10:30 மணிவரையிலும் கணிக்கப்பட்டுள்ளது. அப்போது விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, லட்டு, சோறு, சாம்பார், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளை வைத்து படைத்து வழிபடலாம். விநாயகர் சதுர்த்தி நன்னாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை உறுதி பயபக்தியுடன் விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் கேட்டது கிடைக்கும் என்பது ஐதீகம். அன்றைய நாளில் முக்கியமான விநாயகரின் திருத்தலங்களுக்கு சென்று வரலாம். ஓம் ஸ்ரீ கணபதியே நமஹ, ஓம் கம் கணபதியே நமஹ" என்ற விநாயகரின் மந்திரத்தை உச்சரித்து, புனித நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள விநாயகர் மந்திரத்தை துதித்தவாரு விநாயகர் சதுர்த்தி நாளை சிறப்பிக்கலாம்.