ஆகஸ்ட் 26, சென்னை (Chennaii): மனிதராக பிறந்த ஒவ்வொருவரின் கனவிலும், சொந்த வீடு, வீட்டை சுற்றிலும் பசுமையான சூழல், மரங்களின் நிழலுடன் பறவைகளின் இனிய குரலை கேட்டு வசிக்க வேண்டும் என ஆசை இருக்கும். அந்த வகையில், ஒருசில நேரங்களில் பறவைகள் நமது வீட்டிற்குள் வந்து செல்லும் நிலையும் ஏற்படும். அவை கூடுகட்டி குஞ்சுகளை கூட பொறித்து இருக்கும். இன்று பறவைகள் வீட்டிற்குள் வருவதால் ஏற்படும் பலன்கள் மற்றும் அறிகுறிகள் குறித்த பொதுவான விஷயத்தை இன்று காணலாம்.
காகம்:
சனீஸ்வர பகவானின் வாகனமாக கருதப்படும் காகத்துக்கு, அமாவாசை நாட்களில் சாப்பாடு வைத்திருப்பார்கள். விரதம் இருந்து வழிபடும் பலரும் காகத்திற்கு சாதம் வைத்து பின் சாப்பிடுவார்கள். காகங்களுக்கு சோறு வைப்பது பாவத்தை நீக்க உதவி செய்யும் என்பது ஐதீகம் ஆகும். Krishna Jayanthi 2024: "எப்போதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ., அப்போதெல்லாம் நான் வருவேன்" - இன்று கிருஷ்ண ஜெயந்தி.. வாழ்த்துக்கள் ஆன்மீக சொந்தங்களே.!
வௌவால்:
இந்துமத சாஸ்திரங்களின் குறிப்பிடு, வௌவால் வீட்டிற்குள் வந்து செல்வதை கெட்ட சகுனமாக கருதுகிறது. இதனால் பண வரவு ரீதியிலான பிரச்சனை உண்டாகும். அதே நேரத்தில், வௌவால் இரத்த காயத்துடன் தென்பட்டால், கெட்டது நடக்கப்போகிறது என்பது அர்த்தம் ஆகும்.
கழுகு:
கோவில் திருவிழாக்கள் உட்பட முக்கிய நிகழ்வுகளின்போது கருடனை பார்த்தாலே நல்ல சகுனம் என வணங்குவது உண்டு. கோவில் குடமுழக்கின்போது தென்படும் கருடனை தெய்வமாகவும் மக்கள் வழிபடுவார்கள். அதேநேரத்தில், கழுகு வீட்டிற்குள் வந்தால் கெட்ட சகுனம் எனவும் கூறப்படுகிறது. வீட்டில் உள்ள பிரச்சனைகள் அதிகரிக்கும் தருணத்தை உணர்த்த அல்லது பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கும் அறிகுறியாக கருடன் வீட்டிற்குள் வரும். இதனால் குடும்ப உறுப்பினர்கள் இடையே விரிசல் உண்டாகும் என கூறப்படுகிறது.
சிட்டுக்குருவி:
நமது வீடுகளில் சிட்டுக்குருவி வந்துசென்றால், அதனை விரட்ட வேண்டாம் என பெரியவர்கள் கூறுவார்கள். சிட்டுக்குருவி வீட்டிற்குள் வருவது அரிதிலும் அரிதான விஷயம் எனினும், அவை வீட்டிற்குள் வந்து சென்றால் அதிஷ்டம் கிடைக்கும், செல்வம் அதிகரிக்கும் என்பது ஐதீகம் ஆகும்.
புறா:
தூது விஷயத்தில் தொன்றுதொட்டு பயன்பட்டு வந்த புறா, சமாதானத்தின் அடையாளமாகவும் இருக்கிறது. புறா வீட்டிற்குள் வந்து செல்வது கஷ்டங்களை நீக்கி, புதிய வழியை ஏற்படுத்தும் என்பது நம்பிக்கை. Meal Maker Kuzhambu Recipe: பட்ஜெட் பிரியர்களே.. இறைச்சி சுவையில் மீல்மேக்கர் குழம்பு செய்து அசத்துங்க..!
ஆந்தை:
பொதுவாக ஆந்தை வீட்டிற்குள் வருவது நன்மையை தராது என கருதப்படுகிறது. ஆனால், ஆந்தையை வடமாநிலத்தில் மகாலட்சுமியின் வாகனமாக கவனிக்கிறார்கள். இதனால் ஆந்தையின் வருகை மகாலட்சுமியின் வருகை என உணரப்படுகிறது.
மயில்:
தமிழ்க்கடவுள் மற்றும் ஆதித்தமிழன் முருகனின் வாகனமாக கருதப்படும் மயில், மழையின் வருகையையும், பசுமையையும் தனது அழகிய நடனத்தால் தெரியப்படுத்தும். வினைகளை வேரறுக்கும் வல்லமை கொண்ட மயில், நமக்கு வரும் இடர்களை தடுக்கும் பறவையாக இருக்கிறது. இதனால் வீட்டிற்கு வரும் ஆபத்து தடுக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது.
இன்றுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் அழிவுகள் என்பது எளிதாகிவிட்ட நிலையில், நாம் வசிக்கும் இடங்களில் உள்ள பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு நம்மால் இயன்ற உணவை வழங்கி பாதுகாப்பதே சமத்துவமான நிலையை வழங்கும். தினமும் காலை பறவைகளுக்கு சிறிதளவு அரிசி, கோதுமை போன்ற தானியங்களை வைப்பது, நாய்கள் போன்றவற்றுக்கு உணவு கொடுப்பது நம்மையை தரும்.