ஜனவரி 27, சென்னை (Chennai): சனிப்பெயர்ச்சி (Sani Peyarchi) 29 மார்ச் 2025 அன்று மீன ராசியில் சனி பூரட்டாதி நான்காம் பாத பிரவேசத்தில் தொடங்கி , 17 மாறுபட்ட நட்சத்திர சாரங்களில் சனி சஞ்சாரம் நிகழ்கிறது சனி பகவான் மீன ராசியில் ஜூன் 3 , 2027 வரை சஞ்சாரம் செய்கிறார். இந்த கால கட்டத்தில் அதாவது 29 மார்ச் 2025 முதல் ஜூன் 3 , 2027 வரை உள்ள காலத்தில் சனி மீனத்தில் சஞ்சாரம் செய்யும். சனி கிரகம் தன்னுடைய பெயர்ச்சிப்பலனை ஆறு மாதத்திற்கு முன்பே தரக்கூடிய இயல்பு கொண்டது. சனி கிரகம் தற்சமயம் வக்ர இயக்கத்தில் பின்னோக்கி பயணித்து கொண்டு உள்ளது. சனி பகவான் மீன ராசியில் நின்று பலன் தரக்கூடிய விஷயங்களை 15.11.2024 முதல் முன்கூட்டியே தர உள்ளார்.
கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்:
- மேஷ ராசிக்கு ஏழரை சனி துவக்கம்
- சிம்மராசிக்கு அஷ்டம சனி ஆரம்பம்
- கும்ப ராசிக்கு பாத சனி ஆரம்பம்
- தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டம சனி ஆரம்பம்.
- கன்னி ராசிக்கு கண்டக சனி ஆரம்பம்.
- மீன ராசிக்கு ஜன்ம சனி
பிறந்த கால ஜாதகத்தில் மீனத்தில் ராகு ,கேது ,செவ்வாய், சூரியன், புதன், சனி,சந்திரன் இருக்கும் ஜாதகர்கள் அதீத கவனத்துடன் செயல்பட வேண்டும். மேஷ ராசி, சிம்ம ராசி ,கும்பராசி,மீனராசியில் பிறந்து தற்சமயம் ராகு தசா அல்லது சந்திர தசா அல்லது சனி தசா நடப்பில் இருந்தால் அதீத கவனத்துடன் செயல்பட வேண்டும். நீரை குடம், கேனில் எத்தனை நாள் பிடித்து வைத்து பயன்படுத்தலாம்? இல்லத்தரசிகளே கவனம்.. டிப்ஸ் இதோ.!
சனியின் பாதிப்பில் இருந்து விடுபடும் ராசிகள்:
- மகர ராசிக்கு ஏழரை சனியில் இருந்து விடுதலை
- கடக ராசிக்கு அஷ்டம சனியில் இருந்து விடுதலை
- சிம்மராசிக்கு கண்டக சனி பாதிப்பில் இருந்து விடுதலை
- விருச்சிக ராசிக்கு அர்தாஷ்டம சனி பாதிப்பில் இருந்து விடுதலை.
பரிகாரம்:
தெய்வ வழிபாட்டுடன் வாழ்வியல் பரிகாரத்தையும் செய்வதன் மூலம் சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து எளிதில் விடுபடலாம். சனிக்கிழமை தோறும் பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சனி தோறும் ஆஞ்சினேயர் வழிபாடு செய்யலாம். தேய்பிறை அஷ்டமி தோறும் பைரவருக்கு பூஜை செய்ய வேண்டும். ராகு தசா அல்லது சந்திர தசா நடப்பில் இருப்பவர். அவரவர் ஜாதக அமைப்பின் படி தெய்வ வழிபாடு பரிகாரங்கள் செய்து கொள்வது பேரிழப்பை தவிர்க உதவும். கால் ஊனமுற்றவருக்கு ஊன்றுகோல் அல்லது மூன்று சக்கர சைக்கிள் வழங்குதல், மூட்டை தூக்குபவர்கள், துப்புரவு தொழிலாளிகளுக்கு உதவுதல், காலனி தானமாக வழங்குதல் போன்றவைகள் பலன் (Sani Luck) கொடுக்கும்.