ஜூலை 01, பெங்களூர் (Sports News): இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர அதிரடி ஆட்டக்காரர் தினேஷ் கார்த்திக் (Dinesh Karthik). கடந்த 2004ல் இருந்து தேசிய அளவில் கிரிக்கெட்டில் விளையாட தொடங்கி, இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றவர், கடந்த 2022 வரை இந்திய அணிக்காக பல போட்டிகளில் விளையாடி தனது அசாத்திய பங்கை வெளிப்படுத்தி இருந்தார். ஐசிசி டி20, சாம்பியன்ஸ் ட்ராபி, ஆசியக்கோப்பை உட்பட பல போட்டிகளில் முந்தைய காலங்களில் வெற்றியடைந்த இந்திய அணிக்கு பக்கபலமாகவும் இருந்து வந்தார். தேசிய அளவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் பல்வேறு அணிகளுக்காக விளையாடி வந்த தினேஷ் கார்த்திக், கடந்த 2024 ஐபிஎல் தொடருக்கு பின் தனது ஓய்வை அறிவித்தார். தொடர்ந்து கிரிக்கெட் தொடர்பான விவாத நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இருந்தார். NEET UG Revised Results: நீட் யுஜி மறுதேர்வு எழுதிய 1563 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு; தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.!
பெங்களூர் அணியின் புதிய ஆலோசகர்:
இந்நிலையில், ஐபிஎல் 2025 தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் வழிகாட்டியாக தினேஷ் கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வரும் தினேஷ், தொடர்ந்து ஐபிஎல் தொடரில் பேட்டிங் பயிற்சியாளராக ஆர்.சி.பி அணிக்கு என நியமிக்கப்பட்டுள்ளார். 2024 ஐபிஎல் தொடரில் விலகிய தினேஷுக்கு, உரிய இடம் கிடைத்திருப்பதாக அவரின் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
JUST IN - Dinesh Karthik named RCB's new batting coach and mentor
👏👏👏 pic.twitter.com/bma8rqbZsc
— Cricbuzz (@cricbuzz) July 1, 2024