ஜனவரி 08, சென்னை (Festival News): மார்கழி மாதத்தில் வரக்கூடிய கிருத்திகையை நாம் தெட்சனாய கடை கிருத்திகை என்று கூறுவோம். இது இந்த வருடம் நாளை ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி 3:00 மணிக்கு மேல் தொடங்குகிறது. முருகப்பெருமானுக்கு உகந்த வழிபாடாகவே இந்த நாள் திகழ்கிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நாளில் எந்த முறையில் வழிபாடு செய்தால் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மார்கழி கிருத்திகை (Margazhi Karthigai):
முருகப்பெருமானை எந்த வேண்டுதலுக்காக வேண்டுமானாலும் நாம் வழிபடலாம். அவரை முழு நம்பிக்கையுடன் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை அவர் ஏற்படுத்துவார். சிறந்த செல்வத்தையும் ஞானத்தையும் அருள்வார். நமக்கு இருக்கக்கூடிய தடைகளை நீக்குவார். Thiruvadhirai 2025: நடராஜர், சிவனுக்கு உகந்த திருவாதிரை.. அன்றைய நாளின் அபிஷேகமும் அதன் பலன்களும்.. முழு விபரம் இதோ.!
முருகப்பெருமானை வழிபாடு செய்யும் முறை:
முருகப்பெருமான் (Murugan) வழிபாட்டை தொடர்ச்சியாக 6 நாட்கள் செய்ய வேண்டும். முருகப்பெருமானை மனதார நினைத்துக் கொண்டு இந்த வழிபாட்டை தொடங்க வேண்டும். தினமும் மாலை 6 மணிக்கு இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இதற்கு நம்முடைய வீட்டு பூஜை அறையில் ஒரு பலகையை போட்டு, அதற்கு மேல் முருகப் பெருமானின் படத்தை வைத்துக் கொள்ளுங்கள். அந்த பலகையில் பச்சரிசி மாவினால் நட்சத்திர கோலத்தை போட்டுக் கொள்ளுங்கள். பிறகு முருகப்பெருமானுக்கு முன்பாக ஒரு அகல்விளக்கில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். மேலும் சிறிய தாம்பாள தட்டை வைத்து அதில் ஒரு கைப்பிடி அளவு துவரம் பருப்பு, ஒரு ரூபாய் நாணயம், ஒரு சிறிய விரலி மஞ்சள், ஒரு ஏலக்காய் இவற்றை வைத்து விட வேண்டும்.
பிறகு முருகப்பெருமானுக்கு உகந்த சஸ்திர பந்தம் என்னும் பாடலை 27 முறை பாராயணம் செய்ய வேண்டும். பாராயணம் செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். இந்த தீபம் இரவு 9 மணி வரை எரிய வேண்டும். தொடர்ச்சியாக ஆறு நாட்கள் அதாவது ஜனவரி 9ம் தேதி இந்த வழிபாட்டை ஆரம்பித்து ஜனவரி 14-ஆம் தேதி வரை தொடர்ச்சியாக ஆறு நாட்கள் செய்ய வேண்டும். ஆறு நாட்கள் நிறைவடைந்த பிறகு நாம் தாம்பாளத்தில் வைத்த துவரம் பருப்போடு சிறிது அரிசியை சேர்த்து பறவைகளுக்கு தானமாக தந்துவிட வேண்டும். நாணயம், விரலி மஞ்சள், ஏலக்காய் இவை மூன்றையும் ஒரு சிறிய மூட்டையாக கட்டி பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். Pongal Kolam 2025: பொங்கலுக்கு இப்படி கோலங்களை போடுங்க.. ஏரியாவே வாய்ப்பிளக்கும்.!
சஸ்திர பந்தம் பாடல் வரிகள்:
வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா
மாலைபூ ணேமதிற மால்வலர்தே – சாலவ
மாபாசம் போக மதிதேசார் மாபூதம்
வாபாதந் தாவேல வா.
விளக்கம்: தூயவனே, வேதாந்த கடவுளே, பேரின்பமெனும் அனுபவத்திற்கு தலைவனாக இருப்பவனே, மாலைகளை அணியும் செம்பொன் போல் திகழ்பவனே, என்னுடைய மனதில் நிறைந்திருக்கும் தேவையல்லவைகளை ஒழிய ஞானமும் புகழுமுள்ள பரமான்மாவே வந்தருள்க. உன்னுடைய திருவடிகளாகிய செல்வத்தை எனக்கு தந்தருள வேண்டும்.
முருகனின் வழிபாட்டை முழுமனதோடு செய்பவர்களுக்கு அவர்களுடைய வேண்டுதல்கள் முருகனின் அருளால் விரைவிலேயே நிறைவேறும் என்பது ஐதீகம்.