ASTRO (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 12, சென்னை (Chennai News): சனி பெயர்ச்சி 29 மார்ச் 2025 அன்று மீன ராசியில் சனி பூரட்டாதி நான்காம் பாத பிரவேசத்தில் தொடங்கி , 17 மாறுபட்ட நட்சத்திர சாரங்களில் சனி சஞ்சாரம் நிகழ்கிறது சனி பகவான் மீன ராசியில் ஜூன் 3 , 2027 வரை சஞ்சாரம் செய்கிறார். இந்த கால கட்டத்தில் அதாவது 29 மார்ச் 2025 முதல் ஜூன் 3 , 2027 வரை உள்ள காலத்தில் சனி மீனத்தில் சஞ்சாரம் செய்யும் காலத்தில் கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கான நட்சத்திர பாதம் சார்ந்த சனி பெயர்ச்சி பலன்கள் பார்க்கலாம்.

கன்னி சனி பெயர்ச்சி பலன்கள் (Kanni Sani Peyarchi Palan 2025):

கன்னி ராசி உத்திரம் (2,3 4 ம் பாதங்கள்) நட்சத்திரத்துக்கு சனி பெயர்ச்சி பலன்கள்:

வாழ்க்கைத் துணையால் தொல்லை , சங்கடம் அதிகமாகும் , சொந்த வாழ்வில் மிகவும் எதிர்பார்த்த வெற்றி கை நழுவிப் போகும். மாணவர்களுக்கு நல்ல காலம் என சொல்ல முடியாது , மாணவர்கள் ஒவ்வொரு விஷயத்தில் வெற்றி பெறுவதற்கும் அதிக உழைப்பை கொடுக்க வேண்டி இருக்கும். சோம்பல் இல்லாமல் வேலை செய்தால் மட்டுமே இந்த சனி பெயர்ச்சி காலத்தை மாணவர்களால் சமாளிக்க முடியும். இளம் வயதினரின் திருமண கனவுகள் நிறைவேறும். வேலை வேலை என சனி வேலைப் பளு அதிகம் தருவார். அதற்கு ஏற்ப பலனும் கிடைக்கும் . இட மாற்றம் , பதவி உயர்வுடன் கிடைக்கும். நிதி நிலைமையில் சீரான தன்மை உருவாகும் . தாமதம் ஆனாலும் வருவாய் கெட்டுப் போகாது. சமூக காரியங்கள் நல்ல வேலைகள் கோவில் திருப்பணிகள் உறவினர்கள் வீட்டு திருமணம் நடத்தி வைத்தல் போன்ற நல்ல விஷயங்களை ஈடுபடுவதற்கு இந்த சனி பெயர்ச்சி கன்னி ராசி உத்திரம் நட்சத்திர அன்பர்களுக்கு வழிவகை செய்து கொடுக்கும். Sani Peyarchi Palan 2025: சனிப் பெயர்ச்சி 2025: சிம்ம ராசிக்கு ஏழரை சனி எப்படி இருக்கப் போகுது தெரியுமா? விபரம் உள்ளே.!

ஒன்றுக்கு பலவாக கடமைகள் அதிகரித்து அதிகரித்து உடல் ஆரோக்கியம் அதனால் சோர்வடைந்து பாதிக்கப்படும் சனி கொடுக்கும் வேலைப்பளுவை தாங்குவது தான் இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு வைக்கும் சோதனை. எலும்பு தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் அதனை சரிவர கவனித்துக் கொள்ள வேண்டும் பணி சுமை அதிகமாக இருப்பதால் உடல் பலவீனத்தின் காரணமாக எலும்புகள் அதிகம் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உண்டு, என்னதான் கவனமாக இருந்தாலும் தவறான மருத்துவ சிகிச்சை அமைந்து விடுவதற்கு சனி பெயர்ச்சி ஒரு தூண்டுகோலாக இருக்கும் ஆகவே ஒன்றுக்கு பலமுறை யோசித்து முடிவு எடுக்கவும். அதிகமான பணி சுமை என்பது மட்டும் இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் தவிர்க்க இயலாத ஒரு விஷயம் ஆகவே கன்னி ராசி உத்திரம் நட்சத்திர நண்பர்கள் ஓடி ஓடி உழைப்பதற்கு தயாராக இருங்கள். பலன் கிடைப்பது தாமதம் இருக்கும் அங்கீகாரமும் கிடைக்கும் ஆனால் தாமதமாக அளவு குறைவாக கிடைக்கும் இதை புரிந்து கொண்டு இந்த சனி பெயர்ச்சி காலத்தில் உழைப்பை நிறுத்தாமல் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திர அன்பர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்:

கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திர அன்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி காலம் நன்மை பயப்பதாக இல்லை. உறவு நிலைகளில் அதிக சிக்கல்களை உருவாக்கும் சனியின் பார்வை. மன உறுதியை முற்றிலும் இழக்கச் செய்யும் வகைக்கு சனியின் பாதிப்பு ஹஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு இருக்கும். தொடர்ச்சியான பலவீனமான எண்ணங்கள் தொடர்ச்சியான எதிர்மறை சிந்தனைகளை சனி தனது தாமோ குணத்தால் தூண்டிக்கொண்டே இருப்பார். தவறான சிந்தனைகளுக்கு வழி வகுத்து தீய பழக்கங்களுக்கு ஆட்படுத்துவார். கடன் வாங்க தூண்டும் அளவுக்கு செலவுகளை அதிகப்படுத்தி நிதி நிர்வாகத்தின் மீது தனது தாக்கத்தை அதிகமாக செலுத்தும் சனி. திருமண உறவுகள் மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டும் மிக சமீபத்தில் திருமணம் நடந்திருந்தால் ஆழமான விரிசல்களை சனிப்பெயர்ச்சி உருவாக்கிட கூடும்.

மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த இயலாத அளவுக்கு சனியின் தாக்கம் ஹஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு இருக்கும். ஆனாலும் மாணவர்களின் வெற்றியை சனி தட்டிப் பறிப்பது இல்லை. வெற்றிக்கு அதிகம் உழைக்க வேண்டியிருக்கும் அல்லது உழைப்புக்கு ஏற்ற அளவுக்கு மதிப்பெண்கள் பெறாமல் அல்லது அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம் தோல்வி ஏற்படுவதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு இல்லை சனி அந்த சோதனையை கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திர நண்பர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் தரப்போவது இல்லை. எதிர் கருத்து கொண்டவர்களால் ஏமாற்றப்படும் சூழல் ஹஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு உருவாகும். அதனால் பிறர் தரும் உறுதிமொழிகளை /சத்தியங்களை நம்புவதற்கு முன்பு பலமுறை யோசித்துப் பிறகு முடிவு எடுக்கவும் மிகுந்த பழக்கம் உள்ளவர்களாலும் ஏமாற்றப்படும் சூழல் காணப்படுகிறது.

பயணங்களால் ஆதாயம் கிடைக்கும் ஆனால் பெரிய அளவு ஆதாயம் இருக்காது என்றாலும் மிக முக்கியமான பயன்கள் பயணங்களால் கிடைக்கும் ஆகவே பயணத்தை தவிர்க்க வேண்டாம். பூர்வீக சொத்துகளில் இருந்த தடை விலகும் ஆனால் சொத்தை விற்பதற்கு அதிக சிரமம் உண்டாகும் டாக்குமெண்ட் பிரச்சினைகள் விலகிவிடும். ஆனாலும் சொத்தை விற்பதில் இருக்கும் தடை அப்படியே இருக்கும் இந்த சனி பெயர்ச்சி கடந்த பிறகு தான் அந்த தடை விலகும். ஆன்மீக ,தெய்வம் சார்ந்த விஷயங்களில் கோவில் சார்ந்த விஷயங்களில் சலிப்பு ஏற்படும் காலமாக காணப்படுகிறது இதனால் தயக்கமும் பயமும் கொள்ள வேண்டாம் இந்த சனி பெயர்ச்சி முடிந்த பிறகு நிலைமை சரியாகும். கடன் வாங்குதல் கடன் கொடுத்தல் போன்ற வரவு செலவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் .அதிகம் ஏமாற்றப்படுவதற்கு வாய்ப்பு உண்டு. பெற்றோர்கள் மாமனார் மாமியாருடன் இருந்த உறவு நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி ராசியின் சித்திரை நட்சத்திர (1 ,2 பாதங்கள்) அன்பர்களுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்:

தீமையும் நன்மையும் சரிசமமான அளவில் கலந்து இந்த சனி பெயர்ச்சி காலத்தில் உங்களுக்கு கிடைக்கும். கல்வி மேம்பாடு உத்தியோக உயர்வு பணியிட மாற்றம் சம்பள உயர்வு நிதிநிலை உயர்வு போன்றவற்றில் அதிக முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். புதிய வேலை வாய்ப்புகள் புதிய ப்ராஜெக்ட்டுகள் புதிய வியாபார வாய்ப்புகளை சனி உருவாக்கித் தருவார். போட்டிகள் அதிகம் இருந்தாலும் அவற்றை சமாளிக்க கூடிய அளவுக்கு மனோ பலத்தையும் உடன் பலத்தையும் திறமை பலத்தையும் சனி தேவைக்கு அதிகமாகவே உருவாக்கி தருவார் உற்சாகத்திற்கு குறைவு இருக்காது.பெண் ஜாதகர்களுக்கு வேலை வாய்ப்பு வியாபார வாய்ப்பு அதிகமாக உருவாகும். எத்தனை சம்பாதித்தாலும் ஒன்றுமே சேர்க்க முடியவில்லை என்ற மனக்குறை கொஞ்சம் இருக்கும் வந்த பொருள் சேர்ப்பதற்கு அதிகம் சிரமப்பட வேண்டி இருக்கும் ஆனாலும் நிதிநிலை சீராகவே இருக்கும். உடல் நிலையில. அதிக சோர்வும் மனக்குழப்பங்களும் உருவாகிக் கொண்டே இருக்கும் ஜுரம் காரணம் இல்லாத நவீன ஜுரங்கள் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவிற்கு உடல்நிலை மோசமாகும் ஆகவே கவனமாக இருக்க வேண்டும். சிறு சிறு விபத்துகள் உருவாவதற்கு வாய்ப்பு உண்டு.

நண்பர்கள் உடன் வேலை செய்பவர்கள் உறவினர்கள் பொறாமையால் பாதிப்புகள் உண்டாகும் ஆகவே இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவும் தடைப்பட்ட திருமணங்கள் இந்த சனி பெயர்ச்சி காலத்தில் நல்ல முன்னேற்றம் கண்டு கைகூடி வரும். புத்திர பாக்கியம் அமையும். புதிய மனிதர்களின் உறவுகளால் ஆதாயம் கிடைக்கும் ஆனால் அவர்கள் உங்களை பயன்படுத்தி உயர்ந்து கொள்வதற்கு முயற்சி செய்வார்கள் அந்த விஷயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடந்த காலத்தில் செய்த தவறுகளால் ஏற்பட்ட இழப்புகள் பெருமளவு சரி செய்யப்பட்டு நஷ்டங்கள் குறைக்கப்படுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனாலும் அதற்கு அதிகம் உழைக்க வேண்டியிருக்கும் அந்த உழைப்புக்கு இந்த காலத்தில் பலன் கிடைத்து விடும் என்பதே கவனத்தில் கொள்ள வேண்டும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் வெளிநாட்டிலிருந்து பண ஆதாயம் வெளிநாட்டிலிருந்து வியாபார தொடர்புகள் எதிர்பார்த்து இருப்பவர்கள் ஓரளவு நன்மை அடைவார்கள் என்று சொல்லலாம்.