Thai Shivaratri (Photo Credit: Pixabay / Team LatestLY)

ஜனவரி 23, சென்னை (Festival News): அன்பு இல்லாதவர்கள் ஆனாலும் சரி, அன்பு உள்ளவர்கள் ஆனாலும் சரி. சிவராத்திரி அன்று சிவபெருமானை தரிசித்தவர், விரதம் இருந்தவர், பூஜை செய்தவர் ஆகியோருக்கு நற்கதி கிடைக்கும் என்று சிவபெருமான் சொன்னதாக புராணங்கள் (Hindu festival) தெரிவிக்கின்றன. தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் வரும் மாத சிவராத்திரிக்கு ஒரு சிறப்பு உண்டு. ஒவ்வொரு மாத சிவ ராத்திரி வழிபாடும் ஒவ்வொரு தெய்வத்தால் வழிபடப்பட்டதாகும். அந்த வகையில் தை மாத சிவராத்திரி (Thai Shivaratri) குறித்து இப்பதிவில் காணலாம். Republic Day Speech in Tamil: குடியரசு தின பேச்சுப் போட்டியில் கலந்துக் கொள்ள போறீங்களா? உங்களுக்கான கட்டுரை இதோ.!

மாத சிவ ராத்திரி வழிபாடு:

சித்திரை மாதம் - உமாதேவியால் வழிபடப்பட்டது.

வைகாசி மாதம் - சூரிய பகவானால் வழிபடப்பட்டது.

ஆனி மாதம் - ஈசனால் வழிபடப்பட்டது.

ஆடி மாதம் - முருகனால் வழிபடப்பட்டது.

ஆவணி மாதம் - சந்திரனால் வழிபடப்பட்டது.

புரட்டாசி மாதம் - ஆதி சேஷனால் வழிபடப்பட்டது.

ஐப்பசி மாதம் - இந்திரனால் வழிபடப்பட்டது.

கார்த்திகை மாதம் - சரஸ்வதி தேவியால் வழிபடப்பட்டது.

மார்கழி மாதம் - லட்சுமியால் வழிபடப்பட்டது.

தை மாதம் - நந்தி தேவரால் வழிபடப்பட்டது.

மாசி மாதம் - தேவர்களால் வழிபடப்பட்டது.

பங்குனி மாதம் - குபேரனால் வழிபடப்பட்டது.

வழிபடும் முறை:

மாத சிவராத்திரி நாளில், சிவ வழிபாடு செய்வதும், சிவ தரிசனம் செய்வதும், சிவ நாமங்களை சொல்லி ஜெபிப்பதும் மகத்தான பலன்களை தந்தருளும். இந்த ஆண்டு தை சிவராத்திரி ஜனவரி 27 ஆம் தேதியன்று வருகிறது. தை மாத சிவராத்திரியில் சிவாலயத்துக்குச் சென்று சிவலிங்கத் திருமேனியையும் (Shiva) நந்திதேவரையும் வழிபட வேண்டும். சிவனாருக்கு வில்வம் சார்த்தி பிரார்த்தனை செய்தால் பிரச்சினைகள் எல்லாம் தீர்த்து வைப்பார். அன்றையதினம் சிவன் கோவில்கள் இரவு முழுவதும் திறந்திருக்கும். ஆறு காலங்களுக்கும் அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெறும். அன்று ஈசனை நினைத்து விரதம் இருந்து ஆறு காலங்களையும் அபிஷேக ஆராதனையுடன் தரிசிப்பது மிகவும் புண்ணிய பலன்களை தரும். முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். Milk Value Addition: லாபம் கொட்டும் பால் மதிப்புக் கூட்டல்.. என்னனு தெரியுமா? விபரம் உள்ளே.!

விரதம் இருக்கும் முறை:

விரதம் கடைபிடிப்போர் முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்ய வேண்டும். அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும். மகா சிவராத்திரியில் விரதம் இருப்போருக்கு நினைத்த காரியங்கள் கைகூடும். பொருளாதார முன்னேற்றம் அடைந்து சகல வளங்களும் வெகு விரைவில் கிட்டும்.

சிவராத்திரி ஸ்லோகம்:

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும்

பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்

இனித்த முடனே எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.

சிவராத்திரி ஸ்லோகம்: