Home (Photo Credit: Pixabay)

நம் வீடு கட்டும் போது வாஸ்துப்படி பார்த்துக் கட்ட வேண்டும் என்கிறார்கள் . ஏனெனில் வாஸ்து சாஸ்திரப்படி கட்டப்பட்டுள்ள வீட்டில் லஷ்மி கடாசமும் செல்வ செழிப்பும் இருக்கும். வீடு கட்டும் போது காற்று, நீர், நெருப்பு, நிலம் மற்றும் வானம் பஞ்சபூதங்களின் சமநிலை பெற்றிருக்கும் இடத்தில் சகல செல்வங்களும் தேடிவரும். எனவே வீட்டைக் கட்டும் போது பஞ்சபூதங்களை கணக்கில் கொள்வது தான் வாஸ்து. வாஸ்து சாஸ்திரத்தில் எந்த திசையில் அந்த அறைகள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

வீட்டின் வாஸ்து அமைப்பு:

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீடு அல்லது அறைகள் சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவமாகவோ இருக்க வேண்டும். இந்த இரு வடிவங்களும் ஆற்றலைக் கொண்டதாகவும் , நேர்மறை ஆற்றலை மேம்படுத்தும் சக்தி மிக்கதாகவும் இருக்கின்றன. வீட்டினுள் உள்ள எல்லா மூலைகளிலும் வெளிச்சம் படும் படியாக அமைக்க வேண்டும். Tomato Pachadi Recipe: சுவையான தக்காளி பச்சடி செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

நுழைவு வாயில்:

வீட்டின் நுழைவு வாயில் வழியாகத் தான் நேர்மறை ஆற்றல்களைக் கொண்டு வருவதால் அது சூரியன் உதிக்கும் கிழக்கு திசையில் இருக்க வேண்டும். இப்படி அமைவது மகிழ்ச்சி, வெற்றி மற்றும் ஆரோக்கியத்தை தருவதாக சொல்லப்படுகிறது. வாஸ்துப்படி, வடக்கு மற்றும் வட கிழக்கு நுழைவாயில் கொண்ட வீடு ஆற்றல், செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பை கொண்டு வருகிறது.கதவுக்கு வெளியே நீரூற்று அல்லது நீரை மையமாகக் கொண்ட அலங்காரங்களை வைப்பதைத் தவிர்க்கவும். நுழைவாயிலுக்கு வெளியே ஷூ ரேக் அல்லது டஸ்ட்பின் இருப்பதைத் தவிர்க்கவும்.

சமையல் அறை:

சமையல் அறை என்பது அக்னி பகவான் வசம் செய்யும் வீட்டின் முக்கியமான இடமாகக் கருதப்படுகிறது. இங்கு சமைப்பவர் கிழக்கு திசை நோக்கி இருக்குமாறு அமைக்க வேண்டும். சமையலறையில் ஜன்னல்கள் மற்றும் போதுமான காற்று மற்றும் வெளிச்சம் இருக்க வேண்டும்.

படுக்கை அறை:

வீட்டில் படுக்கை அறையை தென்மேற்கு திசையில் அமைக்கவேண்டும். நீங்கள் தூங்கும் போது தெற்கு திசையில் தலை வைத்து தூங்கும் படியாக அறையை அமைக்க வேண்டும். உங்கள் படுக்கைக்கு நேர் எதிராக கண்ணாடி வைப்பதை தவிர்த்திருங்கள்.

வரவேற்பு அறை:

அனைவரும் கூடும் இடமாக ஹால் உள்ளதால் வாஸ்துப்படி ஹால் வடக்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண்டும் . தெற்கு நோக்கிய வீட்டில் தென்கிழக்கில் இருக்கலாம். பார்ப்பதற்கு இனிமையை அளிக்கக்கூடிய வண்ணங்களை சுவர்களுக்குப் பயன்படுத்தலாம்.நல்ல காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் கிடைக்கும் வகையில் அமைக்க வேண்டும். Urulai Kilangu Kara Kari: உருளைக்கிழங்கு கார கறி செய்வது எப்படி? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

பூஜை அறை:

பூஜை அறை அமைப்பதற்கு வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகள் உகந்தவை. நேர்மறை ஆற்றல்களை கொண்டு வரும் வகையில் அமைக்க வேண்டும். பூஜை அறையை படிக்கட்டுகளுக்கு கீழ், சமையலைறைக்கு அடுத்து

வைக்கக்கூடாது.

இது போன்று வீட்டில் வைக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் வாஸ்து உள்ளது. அதைப் பின்பற்றும் போது சகல செல்வங்களையும் வரவழைக்கும்.