ஆகஸ்ட் 26, சென்னை (Festival News): பெண்கள் சமத்துவ தினம் (Women's Equality Day) ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 26 அன்று கொண்டாடப்படுகிறது. பல நாடுகள் இந்த நாளை விடுமுறையாக அறிவித்துள்ளன. பெண்கள் சமத்துவ தினம் பெண்களின் சமத்துவத்திற்கான போராட்டத்தை நினைவூட்டுகிறது. இது பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் உதவுகிறது. இத்தினம் பெண்களின் சாதனைகளை கொண்டாடுகிறது மற்றும் அவர்களின் எதிர்காலத்திற்கான நம்பிக்கையைத் தருகிறது.
வரலாறு: 1900 களின் முற்பகுதியில், பின்லாந்து, நியூசிலாந்து மற்றும் யுனைடெட் கிங்டம் உள்ளிட்ட பல நாடுகள் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை சட்டப்பூர்வமாக்கின. தொடர்ந்து இந்த இயக்கம் உலகம் முழுவதும் தொடர்ந்து பரவியது. அதன்படி அமெரிக்காவில், பெண்கள் வாக்களிப்பு அரசியலமைப்பின் 19 வது திருத்தம் முதன்முதலில் 1878ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அது ஒப்புதல் அளிக்கப்படாமல் கிடப்பில் வீசப்பட்டது. இறுதியாக அமெரிக்க அரசியலமைப்பின் 19வது திருத்தம் ஜூன் 4, 1919 அன்று அமெரிக்க காங்கிரஸால் நிறைவேற்றப்பட்டது. ஆகஸ்ட் 18, 1920 அன்று அங்கீகரிக்கப்பட்டது. ஆகஸ்ட் 26,1920 அன்று அனைத்து அமெரிக்க பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை உறுதி செய்யப்பட்டது. International Dog Day 2024: "மனிதனே.. உன்னை விட நம்பிக்கையில் நான் ஒரு படி மேல்" சர்வதேச நாய்கள் தினம்..!
அந்த நாளினைப் போற்றும் வகையிலேயே பெண்கள் சமத்துவ தினம் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 26 அன்று அனுசரிக்கப்படுகிறது. இன்று, பெண்களின் சமத்துவம் வெறுமனே வாக்களிக்கும் உரிமையை விட அதிகமாக உள்ளது. சமத்துவம் (Equality) என்பது உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு சமமான அணுகலை வழங்கவும், பெண்களுக்கு எதிரான அடக்குமுறை, பாகுபாடு மற்றும் வன்முறையை எதிர்த்துப் போராடவும், அவர்கள் தங்களுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்ட முடிவுகளையும் தாங்களே எடுக்கும் சுதந்திரம் அவர்களுக்கு வழங்கவும் ஊக்குவிக்கிறது.