Vaikuntha Ekadashi (Photo Credit: LatestLY)

டிசம்பர் 31, ஸ்ரீரங்கம் (Festival News): 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக கருதப்படுவது, திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில் (Arulmigu Aranganatha Swamy Temple, Srirangam). இதனை பூலோக வைகுண்டம் என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர். இந்தக் கோயிலில், நடப்பு ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா (Vaikuntha Ekadashi) திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நேற்று (டிச 30) மாலை கோலாகலமாக தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா இன்று (டிச 31) தொடங்குகிறது. இந்த வைகுண்ட ஏகாதசியின் சிறப்புகள் மற்றும் வரலாற்றினை பற்றி இப்பதிவினில் காணலாம்.

வரலாறு:

முனிவர்களையும், தேவர்களையும் முரண் என்ற அசுரன் துன்புறுத்தியதன் விளைவாக மகாவிஷ்ணு அவனுடன் போர்புரிந்தார். அப்போது மகாவிஷ்ணுவின் உடலில் இருந்து வெளிப்பட்ட சக்தி பெண் உருவம் எடுத்து முரனுடன் போரிட்டு வெற்றி பெற்றதால் அந்த பெண்ணுக்கு ஏகாதசி என விஷ்ணு பெயர் சூட்டியதால் ஏகாதசி என்ற பெயர் வந்தது. வைகுண்ட ஏகாதசி தினத்திற்கு முன் வருகின்ற 10 நாட்கள் பகல் பத்து என்று வைஷ்ணவத்தில் கூறப்படுகிறது. Thiruvadhirai 2025: "சீவனார் என்றும் சிவனார் என்ன வேறில்லை" திருவாதிரை என்பதன் பொருள் என்ன? முழு விபரம் இதோ.!

அதையொட்டி, விஷ்ணு கோயில்கள் அனைத்திலும் திருமொழித் திருநாள் என்ற பகல்பத்து உற்சவம் நடைபெறும். இந்த விழாவை முதன்முதலாக நம்மாழ்வார் தொடங்கி வைத்ததாக கூறப்படுகின்றது. வைகுண்ட ஏகாதசி தினம் முதலாக இரவில் பத்து நாட்கள் நடைபெறுவதே திருவாய்மொழித் திருநாள் என்ற இராப்பத்து உற்சவம் என்று வைஷ்ணவம் கூறுகிறது. இராப்பத்து உற்சவ நாட்களில் திருக்கைத்தல சேவை, திருமங்கை மன்னரின் வேடுபறி போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

சொர்க்கவாசல்:

மது, கைடபர் என்ற அசுரர்கள் இருவரும் மக்கள் அனைவரையும் துன்பப்படுத்தியபோது, பெருமாள் அவர்களுடன் போர் செய்தார். அதனால், இருவரும் பெருமாளிடம் சரணடைந்து வைகுண்ட ஏகாதசி நாளில் பகவானை தரிசிப்பவர்களுக்கு அனைத்து பாவமும் நீங்கி முக்தி கிடைக்க வேண்டும் என்றனர். அதையடுத்து வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் உருவானது. வைகுண்ட ஏகாதசி திருவிழா ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், சென்னை பார்த்தசாரதி கோயில், திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோயில், கும்பகோணம் சார்ங்கபாணி கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாதர் கோயில் போன்ற முக்கிய கோயில்களில் மிக சிறப்பாக நடைபெறும். Namakkal Anjaneyar: 1,00,008 வடை மாலை அலங்காரத்தில் தோற்றமளித்த நாமக்கல் ஆஞ்சநேயர்; அனுமன் ஜெயந்தி சிறப்பு அலங்காரம்..!

வைகுண்ட ஏகாதசியின் சிறப்புகள்:

வைகுண்ட ஏகாதசி நாளில் வழிபடுபவருக்கு வைகுண்ட பதவி அளிப்பதாக மது, கைடபர் அசுரர்களுக்கு பெருமாள் வரம் அளித்தார். அதன் காரணமாக சொர்க்க பதவி கிடைக்கும் சிறப்பு நாளாக வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. மூன்று கோடி ஏகாதசிகளில் விரதம் இருந்த பலனைத் தரக்கூடியது என்பதால் வைகுண்ட ஏகாதசி "முக்கோடி ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து வழிபடுவதால், வாழ்க்கை செழிப்படையும். மறுமை வாழ்வும் மகிழ்ச்சியாக அமையும். மகாலட்சுமியின் அருளால் குபேர சம்பத்து கிடைக்கும். பிரம்மஹத்தி தோஷம், தங்கம் திருடுதல், மதுபானம் அருந்துதல், அகம்பாவம் கொண்டிருப்பதால் உண்டாகும் பாபம் போன்றவைகள் அழிந்து இறுதியில் மோட்சம் கிடைக்கும்.