Vaikuntha Ekadashi 2025 (Photo Credit: @ANI X)

ஜனவரி 10, திருச்சி (Trichy News): மார்கழி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி, வருடத்தில் ஏற்படும் 25 ஏகாதசிகளில் முக்கியமானதாக கவனிக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி () விரதம் ஆன்மீக பக்தர்களிடையே மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்களில் ஒன்றாகவும் கவனிக்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த பண்டிகையான வைகுண்ட ஏகாதசி, பெருமாள் கோவில்களில் திரளாக சிறப்பிக்கப்படுகிறது. Thiruvathirai 2025: திருவாதிரை களி உருவான வரலாறு தெரியுமா? 2025 திருவாதிரை நல்லநேரம், நாள் விபரம் இதோ.!

கோவிந்தா முழக்கம்:

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் (Sri Ranganathaswamy Temple) சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இன்று நம்பெருமாள் பக்தர்களுக்கு பரமபத வாசல் வழியாக வந்து காட்சிதந்தார். அதனைத்தொடர்ந்து பக்தர்களும் சொர்க்க வாசலை கடந்து தங்களின் பிரார்த்தனையை இறைவன்முன்பு மனமுருகி வைத்தனர். கோவிந்தா முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சொர்க்கவாசலை கடந்து வந்தனர்.

மதுரையில் சொர்க்கவாசல் திறப்பு:

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்கவாசல் வழியாக காட்சிதந்த எம்பெருமான்:

திருவரங்கம் கோவிலில் பரமபதவாசல் வழியே எம்பெருமான் நம்பெருமாள்:

ஆயிரக்கணக்கில் குவிந்து நம்பெருமாள் வருகைக்கு காத்திருந்த பக்தர்கள்: