
மார்ச் 04, சென்னை (Chennai News): மண்ணின் வெப்பநிலையும் காலநிலை போன்று மாறக் கூடியதாகும். மண்ணின் வெப்பநிலையை சரியாக கவனிக்காமல் விட்டாலும், பயிர்கள் தன் மகசூலை படிப்படியா இழக்க நேரிடும். பயிர்களில் நீர் ஆவியாதல் நடைபெற மண்ணின் வெப்பனிலை முக்கியம். பயிரிடப்படாத களர் நிலங்களை விட பயிர் செய்யும் நிலங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும். First Night Tips: தாம்பத்ய வாழ்க்கை இனிக்க.. மெல்ல மெல்ல தொடுங்கள்...!
மண் வெப்பநிலை:
- மண்ணின் மாறுபட்ட வெப்பநிலையானது விதையின் முளைப்புத்திறன் மற்றும் வேரின் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். அந்தந்த பயிர்களுக்கு ஏற்ற வெப்ப நிலையில் மட்டுமே செடிகளை வளர்க்க வேண்டும்.
- அதிக வெப்பநிலை இருப்பின் வேரின் வளர்ச்சி தடைப்படுத்துவதோடு , தண்டிலும் சிறு சிறு தடிப்புகளைத் தோற்றுவிக்கும். மேலும் மண்ணின் சத்துக்களும் அழிந்து போக வாய்ப்புண்டு.
- குறைவான வெப்பநிலை, செடிகள் மண்ணிலிருந்து ஊட்டச் சத்துகள் உறிஞ்சுவதைத் தடைசெய்கின்றன. மண்ணின் வெப்பநிலை 1 டிகிரி செல்சியத்திற்கும் குறைவாகச் செல்லும் போது செடிகள், மண்ணிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சுவதை நிறுத்தி விடும்.
- அதிக மண் வெப்பநிலையில், உருளைக்கிழங்கு போன்ற நிலத்தில் கீழ் வளரும் ஒரு சில பயிர்களில் பூச்சிகள் அதிகமாகப் பரவ வழி வகுக்கிறது. இப்பயிருக்கு ஏற்ற வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ். இதை விட வெப்பநிலை அதிகமானால், கிழங்கு உருவாவது தடைபடும்.
- ஆனால், சோளத்தில் வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸிலிருந்து 27 டிகிரிக்கு உயரும்போது அதன் உற்பத்தி திறன் அதிகரிக்கிறது.
- மண்ணில் உள்ள நுண்ணுயிர்களை அழியாமல் பார்த்துக் கொள்ளவும், அவைகளின் பெருக்கத்திற்கும் சரியான மண் வெப்பநிலை தேவைப்படும்.
- மண்ணில் சரியான ஈரப்பதன் இருக்கும் வரை மண்ணின் வெப்பநிலை கட்டுக்குளே இருக்கும்.