
மார்ச் 10, சென்னை (Chennai News): பணப்பயிரான மல்லிகை அதன் வளர்ச்சிகேற்ப மகசூலைத் தந்து, பொருளாதாரத்தை மேம்படுத்தும் பாயிராக உள்ளது. இந்த அதிக தேவையுள்ள மல்லிகைப் பூவை 1 ஏக்கரில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக சாகுபடி செய்து வருகிறார் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி முனியப்பன். மல்லிகைப்பூ சாகுபடி செய்து நிலையான வருமானம் பெறலாம் என தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
சந்தையில் எப்போதும் மல்லிகை பூவிற்கு அதிக மதிப்புண்டு. நடவு செய்ததிலிருந்து சரியான பாராமரிப்பு மட்டுமே தேவைப்படும். செம்மண்ணில் மல்லிகைப் பூக்கள் நன்கு வளர்ந்து அதிக மகசூலைக் கொடுக்கும். மல்லிகை பூக்களை ஜூன், ஜூலை மாதங்களில் நடவு செய்தால் அதிக விளைச்சலை எடுக்கலாம். அடர் நடவு முறையில் ஒரு ஏக்கரில் 5000 குழிகளை வெட்டி நடவு செய்யலாம்.
நிலத்தை உழுது, தொழுவுரம் இட்டு நடவு செய்ய வேண்டும். 3 மாதம் கழித்து செடிகளுக்கு அடியுரமாக மருந்துகளை தரவேண்டும். மண்ணின் தரத்தைப் பொறுத்து மல்லிகைப்பூ செடிகளை 4 அல்லது 3 அடி இடைவேளியில் செடிகளை நடலாம். ஆழமும் அகலமும் ஒன்றரை அடியுள்ள குழி வெட்டி நட வேண்டும். நடவு செய்கையில் செடிகளை சுற்றி பாத்தி போல் அமைத்துக் கொள்வது வேர் பிடிப்பிற்கு உதவும். ஒரு மாதம் கழித்து மண்புழு உரத்துடன் தொழுவுரம் கலந்து செடிகளை சுற்றி கொடுக்க வேண்டும். Female Leader: தலைமை தாங்குவதற்கு பெண்களுக்கு தேவையானவை.. அசத்தல் டிப்ஸ் இதோ..!
நடவு செய்த 3 மாதங்களில் இருந்து பூக்கள் பூக்க ஆரம்பித்து அறுவடைக்கு தயாராகிவிடும். வருடத்தில் 10 மாதங்கள் தொடர்ச்சியாக அறுவடை செய்யலாம். மாதம் ஏக்கருக்கு 50 முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை லாபம் எதிர்பார்க்கலாம். மேலும் பூக்கள், சீசன் பொருத்தும் லாபம் கிடைக்கும்.
காய்ச்சலும் மேய்ச்சலும்
மல்லிகைப் பூக்களில் காவத்து செய்தல் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. நடவு செய்த 6 மாதத்திற்கு மேலிருந்து கவாத்து செய்ய வேண்டும். மாதம் ஒரு முறை கவாத்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மல்லிகை செடிகளுக்கு இடையில் களைகள் இல்லாமல் இருப்பது மிக அவசியம். அறுவடை காலம் முடிந்ததும் செடிகளை நன்கு வெட்டி விட்டு 1 அடிக்கு கட்டி விட வேண்டும். இது செடி தரையில் படுக்காமல் இருக்க உதவும்.
அளவான தண்ணீர்
சொட்டி நீர் பாசம் மூலம் செடிகளுக்கு தண்ணீர் அளிக்க வேண்டும். தண்ணீரை மண் தன்மைக்கு ஏற்ப தண்ணீர் பாய்ச்ச வேண்டும். காவத்து மற்றும் களைகளை எடுத்த பின், பூச்சி தாக்காமல் இருக்க செடிகளுக்கு மேல் மருந்து அடிக்க வேண்டும். மல்லிகைக்கு அதிக தண்ணீரும் அளிக்க கூடாது. கவாத்து செய்த பின் தண்ணீர் அளிக்க வேண்டும். அடுத்த தண்ணீர் 15 நாட்களுக்கு பிறகே கொடுக்க வேண்டும். மாதம் 3 அல்லது 4 முறை தண்ணீர் அளித்தால் போதுமானது என்கிறார் முனியப்பன்.
பூச்சித்தாக்குதல் வாய்ப்பு
மல்லிகை பூக்களுக்கு அதிக பூச்சிதாக்குதல், ஏற்படும் அதே போல் பூக்கள் போக்கும் சமயத்தில் பச்சைப்புழு வரவும் செய்யும். இதை கட்டுப்படுத்த முறையாக மருந்துகளை செடிகள் மேல் அடித்து வந்தால் போதுமானது. பூக்கள் பெரியதாக வரும் போது கருகல் நோய் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மருந்துகளை அந்த சமயத்தில் தெளித்து பார்த்துக் கொள்ள வேண்டும்.