Capsicum (Photo Credit: Pixabay)

மார்ச் 07, சென்னை (Chennai News): நாட்டில் வேளாண்மையை ஊக்குவிக்க அரசு பல ஊக்க தொகைகளையும், மானியத்தையும் வழங்கி வருகிறது. அதனடிப்படையில் விவசாயிகள் மானியம் பெற்று, அதிக லாபம் தரும் பசுமை குடிலை அமைத்து குடைமிளகாய் சாகுபடி செய்யலாம் எனக் கூறுகிறார் ஓசூரில் உள்ள தனியார் இந்திய தோட்டக்கலை மற்றும் உணவு பதனிடுதல் சேவை நிறுவனத்தின் தோட்டக்கலைத்துறை ஆலோசகர் புஷ்பகுமார்.

பசுமைக்குடில் அமைத்து விவசாயம் செய்வது, குறைந்த நிலப்பரப்பில் அதிக மகசூல் ஈட்டுவதேயாகும். அதாவது பசுமைக்குடிலில் 10 ஏக்கரில் எடுக்க கூடிய தரமான விளைச்சலை ஒரே ஏக்கரில் எடுக்கலாம். மேலும் தண்ணீர் தேவையும் குறைவு, பராமரிப்பிற்கு அதிக ஆட்களும் தேவைப்படாது. தேசிய தோட்டக்கலை வாரியம், பசுமைக் குடில் அமைப்பதற்கு 50% மானியம் வழங்குகிறது. மேலும் பசுமைக் குடிலில் காய்கறிகள், கீரைகள், பூக்கள் வளர்க்கலாம்.

குடைமிளகாய் 11 மாத கால பயிராகும். 7 முதல் 8 மாதங்கள் வரை மகசூல் கிடைக்கும். ஏக்கருக்கு 50 - 80 டன் குடைமிளகாயைச் சாகுபடி செய்யலாம். கிலோ 100 முதல் 130 வரை விற்பனையாகி வருகிறது. இது காலநிலை மற்றும் தரத்தைப் பொருத்து, 50 - 60 ரூபாய்க்கும் விற்பனையாகும் ஆனால் நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை. வருடத்திற்கு 50 டன் குடைமிளகாயை குறைந்தபட்சம் 60 ரூபாய் என விற்றால் கூட பராமரிப்பு, உரம், வேலையாட்கள் போன்ற இதர செலவுகள் போக 28 லட்சத்திற்கு மேல் லாபம் ஈட்டமுடியும் என்கிறார் புஷ்பகுமார்.

இதில் பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என தனித்தனியான நிலைகளில் விற்பனையாகிறது. சிவப்பு குடைமிளகாய் அதிக விலைக்கு விற்பனையாகிறது. அதிக அளவில் உற்பத்தி செய்வோரிடம் வியாபாரிகள் நேரடியாக தோட்டத்திற்கு வந்து தரம் பிரித்து எடுத்துச் செல்கின்றனர் அதனால் விவசாயிகள் மார்கெட்டிங் பற்றி பயமின்றி குடைமிளகாய் சாகுபடி செய்யலாம் என்கிறார் ஆலோசகர் புஷ்பகுமார். First Night Tips: தாம்பத்ய வாழ்க்கை இனிக்க.. மெல்ல மெல்ல தொடுங்கள்...!

குடைமிளகாய் சாகுபடி முறை

குடைமிளகாய் சாகுபடிக்கு ஜூன் ஜூலை ஏற்ற பருமவாகும். தண்ணீர் தேங்காத களிமண் அல்லாத நிலம் ஏற்றதாகும். குடைமிளகாய் செடிக்கு செம்மண் பொருத்தமானதாக இருக்கிறது. குடைமிளகாய் நடவு செய்ய எக்கருக்கு 15 டன் தொழுவுரத்தை அடிவுரமாக இட்டு, நிலத்தை உழ வேண்டும். பின் 4 அடி அகலம் உடைய மேட்டுப்பாத்தி அமைத்து ஒரு அடி இடைவெளியில் 35 நாட்களான செடிகளை நட வேண்டும். விதைகளை வாங்கி தனியாக வளர்த்தும் நடவு செய்யலாம்.

எக்கடருக்கு 20 கிலோ தழைச்சத்து மற்றும் 20 கிலோ சாம்பல் சத்தினை நடவு செய்த மூன்று வாரங்களுக்கு பிறகும், 40 கிலோ தழைச்சத்து மற்றும் 40 கிலோ சாம்பல் சத்தினை நடவு செய்த ஆறு வாரங்களுக்கு பிறகும் மேலுரமாக இட வேண்டும். சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 0.5 சதவீதம், 15 நாட்கள் இடைவெளியில் இலைகளின் மீது தெளிக்க வேண்டும். செடிகலுக்கு காலை மாலையும் சொட்டு நீர் பாசனம் மூலம் 30 நிமிடங்கள் தண்ணீர் கொடுத்தால் போதுமானது.

நடவு செய்த 20 நாட்களுக்கு மேல் பூக்கள் பூக்க ஆரம்பித்து விடும். பின் 60ம் நாட்களுக்கு மேல் அறுவடைக்கு தயாராகி விடும்.