Bread Vada (Photo Credit - @KitchenPuja X)

ஜனவரி 17, சென்னை (Chennai): மாலை வேளையில் பள்ளி முடிந்து குழந்தைகள் வீட்டிற்கு பசியோடு வந்திருப்பார்கள். அப்படி பசியுடன் இருக்கும் குழந்தைகளுக்கு காபி, டீ கொடுக்கும் போது, அவர்களுக்கு ஒரு மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம் அல்லவா? அவர்களுக்கு பிரட் கொண்டு ஒரு அட்டகாசமான சுவையைக் கொண்ட வடையை செய்து கொடுங்கள். இந்த பிரட் வடை குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். Court Approve Bail for Marriage: கொலை வழக்கு குற்றவாளிக்கு திருமணத்திற்கு 6 மணிநேர பரோலுக்கு அனுமதி: நீதிமன்றம் உத்தரவு.!

தேவையான பொருட்கள்

பிரெட் - 5

ரவை - 1/4 கப்

அரிசி மாவு - 1/2 கப்

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்

தேவையான கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை

உப்பு - தேவையானஅளவு

தயிர் - 1/2 கப்

சீரகம் - 1 டீஸ்பூன்

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் பிரெட் தூண்டுகளை சேர்க்கவும் அதில் ரவை, அரிசி மாவு, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்க்கவும். மேலும் அதில்,வெங்காயம், தயிர், கொத்தமல்லி, கறிவேப்பிலை இலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதை வடை போல் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான பிரெட் வடை தயார்.