டிசம்பர் 20, சென்னை (Chennai): டிசம்பர் வந்துவிட்டாலே கிறிஸ்துமஸ் கேக்குதான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். அதிலும் வீட்டில் இருக்கக் கூடிய குழந்தைகளுக்கு கேக் செய்து கொடுக்க சொல்லி அடம்பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள். அவர்களுக்கு எப்போதும் போன்று இல்லாமல், இந்த முறை வித்தியாசமாக இந்த கேக் சிக்கிலைச் (Cakesicles) செய்து கொடுங்கள், கண்டிப்பாக அசந்து போவார்கள்.

கேக் சிக்கில் செய்ய தேவையானவை:

கேக் துகள்கள் - ஒரு கப்

விப்பிங் க்ரீம்

டார்க் சாக்லேட்

ஐஸ் குச்சி

ஸ்பிரிங்கிள்ஸ்

உண்ண தகுந்த பூக்கள் (ஃபாண்டன்ட்) WhatsApp Update: வீடியோ கால் பேசிக்கொண்டே, இனி ஆடியோ பதிவுகளை அனுப்பலாம்: வாட்சப்பில் புதிய அப்டேட் இதோ.!

செய்முறை:

கேக்கை நன்றாக உதிர்க்கவும். அதனுடன் அடித்த விப்பிங் கிரீம் சேர்த்து வெடிப்பு இல்லாமல் நன்கு சாஃப்ட்டாக பிசையவும். அதை கேக் சிக்கில் மோல்டில் வைத்து ஐஸ் குச்சி வைத்து ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைக்கவும். டார்க் சாக்லேட்டை உருக்கி ஒரு கிளாஸில் எடுத்துக்கொள்ளவும். நன்றாக செட் செய்த கேக்கை, இதில் டிப் செய்து வைக்கவும். அதன் மீது அலங்கரிக்க ஸ்பிரிங்கிள்ஸ், குட்டி குட்டியான ஃபாண்டன்ட் ஃப்ளவர்ஸ், க்ளிட்டர்ஸ் வைக்கலாம். அவ்வளவு தான் கேக் சிக்கில் ரெடி!