Pacha Pattani Pulao (Photo Credit: YouTube)

செப்டம்பர் 08, சென்னை (Cooking Tips): ஊட்டச்சத்துக்களை தாராளமாக கொண்ட பச்சை பட்டாணி, இரத்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். செரிமானத்திற்கு பெரிய உதவி செய்யும். நாள்பட்ட நோய்களுக்கு எதிராகவும் செயல்படும். வயிறு வீக்கத்தை கட்டுப்படுத்தும். எலும்புகளுக்கு நன்மை அளிக்கவும், வயது காரணமாக ஏற்படும் பிரச்சனைகளையும் பச்சை பட்டாணி சரி செய்யும்.இதுபோல பல நன்மைகளை கொண்ட பச்சை பட்டாணி சந்தைகளில் விற்பனை செய்யப்படும். இன்று பச்சை பட்டாணியில் சுவையான புலாவ் செய்வது எப்படி என தெரிந்துகொள்ளலாம். Peanut Podi Recipe: இட்லி, தோசைக்கு சுவையான வேர்க்கடலை பொடி செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

பச்சை பட்டாணி செய்ய தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 4 கப்,

பீட்ரூட் - கால் கிலோ,

பெரிய வெங்காயம் - 2,

பட்டை - 2,

இலவங்கம் - 4,

பச்சை மிளகாய் - 4,

இஞ்சி-பூண்டு விழுது - 1 கரண்டி,

தயிர் - 2 கரண்டி,

மிளகாய்தூள் - 1/2 கரண்டி,

தனியா தூள் - 1/2 கரண்டி,

கொத்தமல்லி தழை - கையளவு,

நெய் - 1 கரண்டி,

பச்சை பட்டாணி - 100 கிராம்,

உப்பு - தேவையான அளவு,

தாளிக்க:

எண்ணெய் - தேவையான அளவு,

கடுகு - 1/2 கரண்டி,

பெருங்காயம் - சிறிதளவு,

கறிவேப்பில்லை - கையளவு.

செய்முறை:

  • முதலில் எடுத்துக்கொண்ட பீட்ரூட்டை, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பாசுமதி அரிசியை கழுவிய பின்னர், 10 நிமிடங்கள் கழித்து ஊறவைக்க வேண்டும். Karuvadu Thokku Recipe: கிராமத்து ஸ்டைலில் சுவையாக கருவாடு தொக்கு செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

  • குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, இலவங்கம் சேர்த்து தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். பின் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்க வேண்டும்.
  • பச்சை வாசனை போனதும் பீட்ரூட் சேர்த்து வதக்க வேண்டும். பின் மிளகாய் தூள், தனியா சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தயிர் சேர்த்து வதக்கவும்.
  • இவை நன்கு வதங்கியதும் ஊறவைத்த அரிசி, தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி, நெய், பச்சை பட்டாணி ஆகியவற்றை சமஅளவு கலந்து குக்கரில் 1 விசில் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
  • விசில் வந்ததும் அடுப்பை அனைத்து, சாதம் உடையாமல் சிறிது கலந்து பரிமாறலாம். சுவையான பச்சை பட்டாணி புலாவ் தயார்.