நவம்பர் 04, திட்டக்குடி (Cooking Tips): வீடுகளில் எப்போதும் காய்கறியை வைத்து சமைத்து வருத்தமாக இருக்கிறதா? அல்லது காய்கறியே இல்லாமல் என்ன செய்யலாம் என சிந்தனையா? உங்களுக்காக ஒரு அசத்தல் சமையல் டிப்ஸ் இன்று பிரத்தியேகமாக வழங்கப்படுகிறது. வெந்தயம் உடலுக்கு பல்வேறு நன்மையை தரும் ஒரு பொருள். குறிப்பாக குளிர்ச்சியை வாரி வழங்கும் அருமருந்து. மலச்சிக்கல் நீக்கம், கொழுப்பு அளவு கட்டுப்படுத்துதல், இதய நோயின் அபாயம் குறைப்பு என வெந்தயத்தின் பயன்களை அடுக்கிக்கொண்டே போகலாம். வெந்தயத்தில் (Fenugreek) இருக்கும் புரதம், தாதுக்கள், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் பல்வேறு நன்மையை உடலுக்கு வழங்கும். Cooking Tips: 5 நிமிசத்தில் இட்லி, தோசைக்கு ஏற்ற பொட்டுக்கடலை சட்னி; செய்வது எப்படி?.. விபரம் உள்ளே.!
வெந்தயக் குழம்பு (Vendhaya Kuzhambu Seivathu Eppadi) செய்யத் தேவையான பொருட்கள்:
வெந்தயம் - 2 கரண்டி,
எண்ணெய் - 5 கரண்டி (நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயாக இருந்தால் சிறப்பு)
கடுகு, உளுந்து - 2 கரண்டி,
நாட்டு வெங்காயம் - 150 கிராம்,
பூண்டு - 15 - 25 பற்கள்,
தக்காளி - 3 (பொடிப்பொடியே நறுக்கியது),
குழம்பு மிளகாய் தூள் - 3 கரண்டி,
மல்லித்தூள் - 2 கரண்டி,
சீரகத்தூள் - 1/2 கரண்டி,
மஞ்சள் தூள் - சிறிதளவு,
புளி - எலுமிச்சை அளவு,
கறிவேப்பில்லை - சிறிதளவு,
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம், கடுகு-உளுந்து சேர்த்து வதக்கவும். இவை சிவந்ததும் நாட்டு வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கத் தொடங்கியதும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம், பூண்டு சிவந்ததும் தக்காளி சேர்த்து குழைய வதக்கி, இதனுடன் மிளகாய்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறி புளிக்கரைசலை சேர்க்க வேண்டும்.
தேவையான அளவு உப்பு, நீர் சேர்த்து மிதமான தீயில் 15 முதல் 20 நிமிடம் கொதிக்கவிட்டு, எண்ணெய் பிரியும் தருவாயில் கொத்தமல்லித்தழை, கறிவேப்பில்லை தூவி இறக்கினால் சுவையான வெந்தயக் குழம்பு தயார்.
சூடான சாதத்திற்கு சுவை அருமையாக இருக்கும்.