Pottukadalai Chutney (Photo Credit: YouTube)

நவம்பர் 03, திட்டக்குடி (Cooking Tips): நமது வீடுகளில் இட்லி, தோசை போன்றவற்றுக்கு எப்போதும் தேங்காய் சட்னி, தக்காளிச் சட்னி, வெங்காய சட்னி, புதினா-மல்லிச் சட்னி, மட்டன் கறிக்குழம்பு என விதவிதமாக செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால், பொட்டுக்கடலையை பயன்படுத்தி சட்னி செய்வது உண்டா?. அதுபற்றி உங்களுக்கு தெரியுமா?. பெரும்பாலான உணவகத்தில் சட்னியின் ரகசியமும், சுவையும் இந்த போட்டுக்கடலைதான். உங்களுக்கு இந்த விபரம் தெரிந்துவிட்டால், நீங்களே 5 நிமிடத்தில் சுவையான பொட்டுக்கடலை சட்னியை தயார் செய்து சாப்பிடலாம். இதனை இட்லி-தோசைக்கு மட்டுமல்லாது சாதத்திலும் ஊற்றி சாப்பிடலாம், பழைய சாதம், லெமன் சாதத்திற்கு இதனையே கட்டியாக அரைத்து துவையல் போலவும் சாப்பிடலாம். Chettinad Ukkarai Recipe: அல்வாவை மிஞ்சும் சுவையில் செட்டிநாடு உக்காரை செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

பொட்டுக்கடலை சட்னி (Pottukadalai Chutney) செய்யத் தேவையான பொருட்கள்:

பொட்டுக்கடலை - 2 கைப்பிடி,

நாட்டு வெங்காயம் - 2,

பூண்டு - 4,

காய்ந்த மிளகாய் அல்லது பச்சை மிளகாய் - 4, (காரம் குறைவாக தேவைப்பட்டால் எண்ணிக்கை குறைக்கவும்)

புளி - சிறிதளவு,

இஞ்சி - 3/4 இன்ச்,

உப்பு - தேவையான அளவு,

கடுகு-உளுந்து - சிறிதளவு,

தாளிப்பு வடகம் - சிறிதளவு (இருந்தால் பயன்படுத்திக்கொள்ளவும்)

கறிவேப்பில்லை - சிறிதளவு,

செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட பொட்டுக்கடலை, புளி, மிளகாய், தேவையான அளவு உப்பு, சிறிதளவு கறிவேப்பில்லை, பூண்டு ஆகியவற்றை மிக்சியில் சேர்த்து நன்கு மைபட அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின் வானெலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு-உளுந்து, தாளிப்பு வடகம், நறுக்கிய 1 பூண்டு, கறிவேப்பில்லை, சீரகம் ஆகியவை சேர்த்து தாளிக்க வேண்டும். தாளிப்புடன் அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை சட்னியை சேர்த்து சுவைபட பரிமாறி சாப்பிடலாம்.

இதனை இட்லி, தோசைக்கு மட்டுமல்லாது சாதத்திலும் சேர்த்து சாப்பிடலாம். விருப்பம் உடையோர் கட்டியாக அரைத்து எடுத்து எலுமிச்சை சாதத்திற்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.