Paneer Tikka (Photo Credit: Pixabay)

மார்ச் 21, புதுடெல்லி (New Delhi): பன்னீரில் நம் உடலுக்குத் தேவையான முக்கிய சத்துக்களான பாஸ்பரஸ், புரதச்சத்து, கார்போஹைட்ரைட், கொழுப்பு அதிகமாக இருப்பதால் நாம் அதனை உட்கொள்ளும்போது அதன் முழுப்பலனை பெற முடியும். இத்தகைய பன்னீரில் டிக்கா (Paneer Tikka) செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

கடுகு எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்

கரம் மசாலா - கால் டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கட்டி தயிர் - இரண்டு டீஸ்பூன்

ரெட் கலர் - ஒரு சிட்டிகை

தக்காளி - 2

நறுக்கிய பன்னீர் துண்டு

வட்டமாக நறுக்கிய பச்சை குடைமிளகாய்

எண்ணெய் - தேவையான அளவு

லாங் ஸ்டிக்

வெண்ணெய் - சிறிதளவு 'Thank You Thala': "நன்றி தல.." அருணாச்சலம் ரஜினி ஸ்டைலில் ருதுராஜிடம் கேப்டன்சி பொறுப்பை ஒப்படைத்த தோனி..!

செய்முறை: ஒரு கிண்ணத்தில் கடுகு எண்ணெய், கரம் மசாலா, கருப்பு உப்பு, சீரக தூள், கட்டி தயிர், ரெட் கலர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு, பன்னீர், குடைமிளகாய், தக்காளி துண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து இருபது நிமிடம் ஊறவைக்கவும்.

லாங் ஸ்டிக்கில் வெண்ணெய் தடவி குடைமிளகாய், பன்னீர், தக்காளி, பன்னீர், தக்காளி, பன்னீர், குடைமிளகாய் ஆகியவற்றை ஒவொன்றாக குத்தி வைத்து கொள்ளவும். பின், தவாவில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு சிறு தீயில் வைத்து பொன்னிறமாக வந்தவுடன் எடுத்தால் சுவையான பன்னீர் டிக்கா தயார். இதனை சாசுடன் பரிமாறவும்.