Idli (Photo Credit: YouTube)

மார்ச் 03, சென்னை (Kitchen Tips): இட்லி பிரியர்களுக்காக பலவிதமான ரெசிபிகள் உள்ளன. அந்தவகையில், வீட்டிலேயே சுவையான பொடி இட்லி எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் பார்ப்போம். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

தேவையான பொருட்கள்:

இட்லி

வர மிளகாய் - 13

பொட்டுக்கடலை - அரை கப்

கருவேப்பிலை - 3 கொத்து

உளுந்து - 1 கப்

கடுகு - 1டேபிள் ஸ்பூன்

நெய் - 1டேபிள் ஸ்பூன்

நல்லெண்ணெய் - 1டேபிள் ஸ்பூன் Uppu Kolukkattai Recipe: சுவையான உப்பு கொழுக்கட்டை செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

செய்முறை:

இதற்கு தேவையான வரமிளகாய் கறிவேப்பிலை பொட்டுக்கடலை கடலைப்பருப்பு கறிவேப்பிலை ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்கவேண்டும்.சூடு தனித்த பண்பு இவை எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு அரைத்து எடுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும் எண்ணை காய்ந்ததும் அதில் ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு, ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்க்க வேண்டும். இப்பொழுது அதில் இட்லி பொடி மற்றும் வேகவைத்த வைத்திருக்கும் இட்லி சேர்த்து நன்றாக கிளறி விடவேண்டும் தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.