பிப்ரவரி 15, சென்னை (Chennai): குழந்தைகளுக்கு பேபி கார்ன் மிகவும் பிடித்தமான ஒன்று. குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும், பேபி கார்னை விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் அதனை மசாலா, ப்ரை செய்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். இங்கு அந்த பேபி கார்ன் கொண்டு எப்படி தந்தூரி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பேபிகான்: 2 கப்
கான்பிலார் மாவு: 2 ஸ்பூன்
மிளகாய் தூள்: 2 ஸ்பூன்
கஸ்தூரி மேத்தி: 1 ஸ்பூன்
பூண்டு விழுது: 1ஸ்பூன்
உப்பு: தேவையான அளவு
மிளகுத் தூள்: 1 ஸ்பூன்
கரம்மசாலா: அரை ஸ்பூன்
எழுமிச்சை பழம்: அரை
கொத்தமல்லி இலை This Week OTT Rls - Feb 15: இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்கள்.. அசோக் செல்வன் ரசிகர்களுக்கு விருந்து..!
செய்முறை: தயிருடன் மிளகாய் தூள், கறிமசாலா தூள், உப்பு, பூண்டு விழுது, கஸ்தூரி மேத்தி 1ஸ்பூன், கான்பிலார் மாவு, மிளகு தூள் அரை ஸ்பூன், எழுமிச்சை பழம் அரை சேர்த்து கிளறி விடவும். அதனுடன் நறுக்கிய பேபிகான் சேர்த்து கொத்தமல்லி இல்லை சேர்த்து கிளறி விடவும். பின்னர் அடுப்பில் எண்ணெய் ஊற்றி பேபிகான் கலவை வைத்து பொன்நிறமாக புரட்டி எடுத்தால், சுவையான பேபிகான் தந்தூரி ரெடி.