Vegetable Pakoda (Photo Credit: YouTube)

மார்ச் 28, சென்னை (Chennai): உணவு மற்றும் சமையலில் விருப்பமுள்ளவர்கள் அடிக்கடி எதையாவது முயற்சிப்பது உண்டு. அந்த வகையில் இன்று மாலை நேர சிற்றுண்டியாக காய்கறி பக்கோடா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கேரட் - 1/4 கப்

உருளைக் கிழங்கு - 1/4 கப்

காலிஃப்ளவர் - 1/4 கப்

மிஸ்ட் பீன்ஸ் - 1/4 கப்

பெரிய வெங்காயம் - 1

சோளமாவு - 1/2 கப்

மைதா மாவு - 1 கப்

சில்லி ஃப்ளெக்ஸ் - 2 டீஸ்பூன்

காஷ்மீர் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு Police Officer Drinking On Duty: "நிம்மதியா குடிக்க விடுங்க டா..." கடுப்பான காவல்துறை அதிகாரி..!

செய்முறை: காய்கறிகளை கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, சில்லி ஃப்ளெக்ஸ், மிளகாய் தூள், உப்பு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும். அத்துடன் நறுக்கி வைத்துள்ள காய்கறி துண்டுகளை பிரட்டி பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.

பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவில் ஊற வைத்த காய்கறிகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் காய்கறி பக்கோடா தயார். தயாரான காய்கறி பக்கோடாக்களை எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். இப்போது மிகவும் சுவையான, காய்கறி பக்கோடா சுவைக்கத்தயார்.