Bathing & Soap (Photo Credit: Pixabay)

ஜூலை 16, சென்னை (Health Tips): அன்றைய காலத்தில் வீட்டில் பலரும் ஒரே சோப்பை பயன்படுத்தி வந்தனர். ஒரே சோப்பு பயன்படுத்துவது அப்போது பெரிய விஷயமாக இல்லை என்றாலும் தற்போது மக்களிடையே அது குறித்து விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. குடும்பத்துக்குள்ளும் தனித்தனி சோப்பு வாங்கி பயன்படுத்துகின்றனர். ஒவ்வொருவரும் தனக்கென தனித்தனி சோப்பு பயன்படுத்துவது ஆரோக்கியமான விஷயம் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். ஒரே சோப்பை பலர் பயன்படுத்துவதால் தீமை என்பது அதிகமாகும்.

பாக்டீரியா பரவும் அபாயம் :

பாத்ரூமில் ஒருவர் பயன்படுத்தும் சோப்பை மற்றொருவர் பயன்படுத்தினால் சருமநோய் பிரச்சனை ஏற்படும். அப்படி பயன்படுத்தும் கட்டாய சூழல் ஏற்பட்டால் ஒருவர் பயன்படுத்தியபின் அதனை கழுவி வைக்க வேண்டும். அதுவே தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும். சோப்பு ஈரமாக இருந்தால் பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் பரவும். நுண்ணுயிரிகள் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிமையாக பரவும். Health Tips: முட்டையை பச்சையா சாப்பிடுறீங்களா?.. உங்களுக்கு தான் இந்த எச்சரிக்கை செய்தி.!

சரும பிரச்சனை :

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதவர்கள் சரும பிரச்சனை காரணமாகவும் பாதிக்க நேரிடும். கணவன், மனைவியாக இருந்தாலும் ஒருவருக்கு ஒரு சோப்பு என்ற முறையை பயன்படுத்தினால் எந்த விதமான பிரச்சினையும் இல்லை. உடலை சுத்தம் செய்யவும், புத்துணர்ச்சிக்காகவும் பயன்படுத்தும் சோப், நமது உடலில் இருக்கும் அழுக்கு, தூசி, பாக்டீரியா, வைரஸ், கிருமி, எண்ணெய் படலம் போன்றவற்றை அகற்றுகிறது. அதனை தரமுள்ளதாக வாங்கி பயன்படுத்துவது நல்லது.