Agarbatti (Photo Credit : Youtube)

ஆகஸ்ட் 03, சென்னை (Health Tips Tamil): வீட்டில் பூஜை செய்ய பயன்படுத்தப்படும் ஊதுபத்தி நறுமணத்தை வழங்குகிறது. ஆன்மீக ரீதியாக பற்றுள்ளோர் நறுமணத்தை உணர்ந்ததும் தங்களது மனதுக்கு அமைதி உணர்வு ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். ஆனால் செயற்கையான முறையில் ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்படும் ஊதுபத்திகள் உடல்நலத்திற்கு மிகப்பெரிய கேடுகளை விளைவிப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். புகைப்பழக்கம் உடல்நலத்திற்கு கேடு என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் ஊதுபத்தி புகை சத்தமே இல்லாமல் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது.

ஊதுபத்தி உபயோகிப்பதால் ஆபத்து :

இந்த ரசாயனங்களால் சேகரிக்கப்பட்டு தயாரிக்கப்படும் ஊதுபத்தி புகையை விட ஆபத்தானது எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கடந்த 2015 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஒரு ஆய்வில் ஊதுபத்தி எரிக்கும் போது வெளியேறும் புகையில் உள்ள துகள்கள் காற்றில் கலந்து உடலில் பாதிப்பை ஏற்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊதுபத்தி புகையில் ஜெனோடாக்சிக், மியூட்டாஜெனிக், சைடோடாக்சிக் என்ற விஷத்தன்மை கொண்ட நச்சுக்களும் இருக்கின்றன. இவை சில நேரங்களில் புற்றுநோய்க்கும் காரணமாக அமைகிறது. Aadi Perukku 2025: ஆடிப்பெருக்கு வரலாறு என்ன? மங்களம் நீடிக்க சுமங்கலி விரதம்.. விபரம் இதோ.!

ஊதுபத்தியால் ஏற்படும் உடல்நலக்கோளாறுகள் :

இந்த புற்றுநோய் நமது மரபணுவில் மாற்றங்களை ஏற்படுத்தி டிஎன்ஏவில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாகும். அதேபோல ஊதுபத்தி புகையை நாம் சுவாசித்து வருவதால் சுவாச மண்டலத்துக்கும் கேடு ஏற்படுகிறது. நுரையீரல் எரிச்சல், நுரையீரல் அலர்ஜி, மூச்சுத்திறனறல், தொண்டை எரிச்சல் போன்றவையும் ஏற்படுகிறது. ஊதுபத்தியில் இருக்கும் நச்சுத்தன்மை கண்களுக்கு எரிச்சல், தோல் ஒவ்வாமை போன்றவற்றையும் உண்டாக்குகிறது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.