ஜூலை 27, சென்னை (Health Tips Tamil): ஒவ்வொரு வீட்டிலும் தினமும் காலையில் பள்ளி, அலுவலகம் போன்ற பணிகளுக்கு செல்வோர் சாப்பாடு ரெடியா? என்ற கேள்வியை காலை 6 மணி முதல் கேட்கத்தொடங்கி விடுகின்றனர். அதேபோல சமையல் செய்யும் பெண்களின் உடல் உழைப்பை கூட கருதாமல் அதன் ருசியை மற்றும் எதிர்பார்க்கும் பலரும் இருக்கின்றனர். இந்நிலையில் தினமும் நீண்ட நேரம் சமையலறையில் செலவிடும் இந்திய பெண்களுக்கு பல்வேறு உடல்நலக்குறைவுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. PMMVY Scheme: கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்கும் மத்திய அரசின் திட்டம்.. விண்ணப்பிப்பது எப்படி?.!
சமையலறையில் நேரத்தை செலவிடும் பெண்கள் :
சமையலறையில் உரிய வெளிச்சம், காற்று போன்றவை இல்லாத காரணத்தால் நாள்பட்ட உடல்நல கோளாறுகளுக்கு பெண்கள் ஆளாக நேரிடுவதாகவும் அந்த ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு சமையலறையில் நேரத்தை செலவிடும் பெண்கள் காற்று மாசுபாடு காரணமாக 3.2 மில்லியன் அளவு உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தினமும் சமையலறையில் நேரத்தை செலவிடும் பெண்களில் 32% நபர்களுக்கு இதய நோயும், 23% நபர்களுக்கு பக்கவாதமும், 21% நபர்களுக்கு சுவாச நோயும், 19% நபர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
பெண்களுக்கு ஏற்படும் உடல்நல கோளாறுகள் :
சமையலறையில் இருந்து வெளியேறும் வாயு நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகும். இதனை நீண்ட காலம் சுவாசிப்பதால் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகிறது. மேலும் சுவாச நோய், தலைவலி, சோர்வு, கண் எரிச்சல், நீர் வடிதல் போன்றவையும் ஏற்படுகிறது. மரம் மற்றும் கரியை பயன்படுத்தி சமைக்கும் நபர்களின் நிலைமை இன்னும் மோசம் என குறிப்பிட்டுள்ள நிபுணர்கள், சமையலறையில் உரிய காற்றோட்டம் போன்றவை இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கின்றனர். மேலும் குறுகிய நேரத்தில் சமையலை முடித்துக் கொள்ளவும் அறிவுறுத்துகின்றனர்.