Mandi Biryani (Photo Credit: YouTube)

மார்ச் 24, நாகர்கோவில் (Kanyakumari News): கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் (Nagercoil) லியாகத் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு பெரியவிளையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேர் மந்தி பிரியாணி (Mandi Biryani) வாங்கி வந்து சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்டு முடித்த சற்று நேரத்தில், அவர்களுக்கு வாந்தி, கடுமையான வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. Girl Dies Of Electrocution: ஈரமான கையுடன் செல்போனுக்கு சார்ஜ் போட்ட சிறுமி.. நொடியில் உயிரிழந்த சோகம்..!

17 பேர் மருத்துவமனையில் அனுமதி:

இதனையடுத்து, அவர்கள் 17 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையில் விசாரணை நடத்தினர். இதில், கடையில் உணவு சாப்பிட்ட மற்றவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படவில்லை எனவும், பதிக்கப்பட்டவர்களிடம் தொடர்பில் இருந்து வருவதாகவும் ஹோட்டல் உரிமையாளர் திவான் கூறினார். இதுகுறித்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.