Rabbit (Photo Credit: Pixabay)

மார்ச் 07, சென்னை (Chennai News): வணிக அளவில் அதிக தேவை இருக்கும் கால்நடைகளில் முயல்களும் முக்கியமானது. அதிக வெப்பத்தை முயல்களால் தாங்க இயலாது. மற்ற கால்நடைகளை விட முயல்களுக்கு கோடைகாலத்தில் அதிக கவனம் தேவைப்படும். குளிர்ச்சியான இடங்கலிலேயெ இருக்க முயல்கள் விரும்பும். அவைகளால் அதிக வெப்பத்தை தாங்க இயலாது. கூண்டுகள் அல்லது பண்ணையில் முயல் வளர்ப்பவர்கள் கோடைகாலத்தில் முயல்களை அதிக வெப்பத்திலிருந்து காப்பதற்கான சில எளிய வழிகள். First Night Tips: தாம்பத்ய வாழ்க்கை இனிக்க.. மெல்ல மெல்ல தொடுங்கள்...!

முயல் பாரமரிப்பு:

  •   கோடைகாலத்தில் முயல் வைத்துள்ள அமைத்துள்ள இடங்களின் சீலிங்களின் மேல் தென்னங்கீற்றைப் போட வேண்டும்.
  •             பச்சை நிற வலை, சணல் பைகளை பண்ணை அல்லது கூண்டை சுற்றி அமைக்க வேண்டும். இவைகள் வெப்பம், உள்நுழைவதை தடுத்து விடுகிறது. 
  •            விரிப்புகளாக சணம் சாக்குகளை விரிக்க வேண்டும். அவ்வப்போது அதில் தண்ணீரை ஸ்பிரே அசெய்து வைக்கலாம்.  
  •            அவ்வப்போது கூரை மற்றும் பண்ணையை சுற்றி தண்ணீர் தெளிக்க வேண்டும். பெரிய பண்ணைகள் அமைத்து வளர்ப்பவர்கள், குளிர்ச்சிகாக ஃபேன்களை வைக்கலாம்.  
  •           முயல்களுக்கு போதுமான அளவு காற்றோட்டம் இருக்குமாறு இட வசதி  அமைக்க வேண்டும். அதிக முயல்களை ஒரே இடத்தில் வைப்பது உடலில் வெப்பனிலையை அதிகரிக்க வைக்கும். 
  •            உடலுக்கு அதிக நீர் அளிப்பதற்காக, அவைகளுக்கு அளிக்கும் தீவனத்தின் அளவை சற்று அதிகபடுத்த வேண்டும். நீர்சத்துள்ள பசுந்தீவனம் நல்லது.
  •           குடிக்க வைக்கும் தண்ணீரில் சிறிது குளுகோல் கலந்து கொடுப்பது உடலில் வெப்பக்குறைக்க உதவும்.
  •         வெப்பத்தாக்கத்தை கட்டுப்படுத்தினால் குட்டிகள் உயிரிழப்பை தடுத்து விடலாம்.