
மார்ச் 06, சென்னை (Chennai News): செல்லப் பிராணிகள் வளர்ப்பது பலருக்கும் பிடித்த ஒரு செயலாகும். சிறுவயதிலிருந்தே செல்லப்பிராணிகளை ஆசையாக பலரும் வளர்த்தி வருவர். பொதுவாக கிராமத்தில் ஆடு, மாடு, கோழி வீட்டில் வளர்பார்கள். ஆனால் அவைகளை செல்லப் பிராணிகள் பட்டியலில் வராமல் கால்நடைகளாக இருக்கும். சில வீடுகளில் மட்டுமே இவைகளை செல்லப்பிராணிகளாக வளர்கின்றனர்.
குழந்தைகள் செல்லபிராணிகளை வளர்க்கும் போது அவர்களுக்கு பொறுப்புணர்ச்சி அதிகரிப்பதோடு பிற உயிர்கள் மேல் அன்பு செலுத்தும் குணமும் அதிகரிக்கும். மேலும் செல்லப் பிராணியின் பிரிவின் போதும் தங்கள் அன்பின் ஆழத்தையும் புரிய வைக்கும். செல்லப் பிராணிகளை வளர்க்கும் போது தனிமை உணர்வு ஏற்படாது அதோடு மனநல சார்ந்த பிரச்சனைகள் தீரும் என்றும் பல ஆராய்ச்சிகள் கூறுகிறது. வீட்டில் செல்லப் பிராணிகள் உரிமையாளரின் மனநிலையை நன்கு புரிந்து கொள்ளும். மேலும் அவைகள் செய்யும் சேட்டைகளும், விளையாட்டுகளையும் பார்க்கும் போது மன உலைச்சல் இன்றி மனதிற்கு அமைதியை அளிக்கும்.
பூனை
செல்லப் பிராணிகளில் வித்தியாசமாகவும் அன்பாகவும் பழகும் விலங்காக பூனை இருக்கிறது. ஆரம்பத்தில் எலிகளை வேட்டையாட மட்டுமே பயன்படுத்தப்பட்ட பூனைகள், மனிதனை ஆளக்கூடிய இடத்தையும் பூனைகளுக்கு அளிக்கும் அளவிற்கு அளவற்ற அன்பை வைத்து வருகின்றன. விலங்குகளிலேயே பூனைகள் வினோதமான குணாதிசியம் கொண்டவையாகும். பூனைகள் நாள் ஒன்றுக்கு 13 முதல் 14 மணி நேரம் தூங்குவதிலேயே செலவிடுகின்றனர். மேலும் வீடுகளில் பூச்சிகள் எலிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளும். மனிதர்களுடன் பாசமாக பழகும் இந்த பூனைகள், ஃபளாட்களில் வளர்ப்பதற்கு ஏற்ற செல்லபிராணியாகும். நாட்டுபூனைகள், வெளிநாட்டு ரக பூனைகள் என அனைத்துமே மனிதர்களுடன் அன்பாக பழகுபவையே.
நாய்
மனிதர்களால் அதிகம் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளில் முதல் இடத்தில் உள்ளது நாய் தான். பெருமான்மையானவர்கள் நாய் வளர்ப்பதில் ஈடுபட்டு வருகின்றன. வேட்டையாடுவதற்கும், போர்களில் ஈடுபடுவதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்த நாய்கள் அவைகளின் நன்றி உணர்வாலும், அன்பு செலுத்துவதாலும் நாய் மனிதர்களுக்கு மிக நெருக்கமான செல்லப் பிராணியாக உள்ளது. நாய்களில் பல ரகங்கள் உள்ளதால் தங்கள் தேவைக்கு ஏற்ப அவைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அளவில் சிறியதாக இருக்கும் நாய் ரகங்கள், ஃபளாட்டுகளில் வளர்க்கலாம். சமீப கலமாக நாட்டு ரக நாய் இனங்கள் மேல் ஆர்வர்முள்ளவர்கள் அவைகளை மீட்டு எடுத்து வளர்க்கும் நோக்கில் பலரும் வளர்த்து வருகின்றனர். Chicken Heat Stress: கோடையில் கோழிகளுக்கு வெப்ப பாதிப்பு.. பாதுகாக்க சில வழிமுறைகள்!
முயல்
நாய் பூனைக்கு அடுத்து விலங்கினத்தில் முயல்கள் தான் பெரும்பான்மையினரால் வளர்க்கப்படுகிறது. இவைகளை நாய் பூனை போன்று அன்பை அளிப்பதற்காக இல்லாமல், ஒரு காட்சிப் பொருளாக வளர்கின்றனர். வெள்ளை, கருப்பு என பல நிறங்களில் முயல்கள் வளர்கின்றனர். முயல்கள் கொழுகொழுவெனவும், அவைகளின் சாப்டான முடியும், பெரிய கண்களும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இதில் பல வெளிநட்டு ரகங்கள் உள்ளது. இவைகளின் கண்கள் நிறமும் பல நிறங்களில் உள்ளது. குழந்தைகளுடன் முயல்கள் அன்பாக பழகும் தன்மை கொண்டவை. இவைகள் உணவை உண்டு கொண்டே இருக்கும். மேலும் இவைகள் கூண்டிற்குள்ளும் வளர்க்கலாம்.
மீன்
விலங்குகளை செல்லப் பிராணிகள் வளர்க்க பிடிக்காதவர்களும், சூழ்னிலையில் இவைகலை வளர்க்க இயலாதவர்களும் மீன்களை செல்லப்பிராணியாக வளர்க்க நினைப்பதுண்டு. காரணம் இவைகள் தொட்டிகளில் தனியாக இருக்கும். அதிக பாரமரிப்புத் தேவை இல்லை. அவ்வப்போது உணவுகளை மட்டும் அளித்தால் போதும். மீன்கள் நீந்துவதை பார்ப்பதற்கு மன அமைதியை ஏற்படுத்தும். மேலும் மனதை ஒரு நிலைப்படுத்தவும் மீன்களை வளர்க்கலாம்.
பறவைகள்
பல வீடுகளில் அழகிற்காக லவ் பேட்ஸ், புறாக்கள், குருவிகள் போன்ற பறவைகளை வளர்ப்பர். பறவைகள் மேல் ஆர்வமுள்ளவர்களுக்கு பல வகையான பறவைகள் வளர்க்க பிடிக்கும். ஒரு சில வெளிநாட்டு ரக பற்வைகள் வாங்கி வளர்த்து வருவர். இவைகளின் சத்தம் மன அழுத்ததை குறைத்துவிடும். மேலும் அதிகம் கோபப்படுபவர்கள் பறவைகள் வளர்ப்பது கோபத்தை குறைக்க உதவும். திறந்த வெளி, போன்ற பகுதிகளில் கூண்டுகளில் இவைகளை வளர்க்கலாம். பால்கனி வீட்டின் ஊட்புறத்தில் இவைகளை வளர்க்கலாம். வீட்டிர்கு அழகையே இவைகல் அதிகரித்து தரும்.
ஆமை & தவளை
வீட்டி ஒரு சிலர் தவளை மற்றும் ஆமைகளை செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். ஆமைகள் மனிதர்களுடன் அன்பாக பழகும் குணம் கொண்டவை. ஆமைகளை வீட்டில் வளர்த்தால் வீட்டிற்கு ஆகாது என்று சொல்லி பலரும் இதை வளர்ப்பதில்லை. ஆனால் ஆமைகள் மனிதர்களை விட அதிக ஆயுள் காலம் கொண்டவை. ராஜாக்கள் அவர்களின் அடுத்த தலைமுறைகளுக்கு ஆமைகளை பரிசளித்துள்ளனர். செல்லபிராணிகளின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் ஆமைகளை வளர்க்கலாம். இவைகள் வளர்க்க அதிக இடமும் தேவைப்படுவதில்லை.
தவளைகலை ஒரு சிலரே வளக்கின்றனர். ஆனால் தவளைகளை பராமரித்துக் கொள்வது மிக எளிதானது. மேலும் இவைகளை செல்லப் பிராணியாக வளர்ப்பவர்களிடன் அதிக அன்பையும் தவளைகள் செலுத்தும். பல வெளிநாட்டு ரக தவளைகள் பார்க்க அழகாக இருப்பதுடன் பெரிதாகவும் வளரும்.
எலி
எலி இனங்களை பலரும் விருப்பத்துடன் வளர்த்து வருகின்றனர். இதுவும் முயல்களை போன்று இருப்பவை. இவைகளில் பல ரகங்கள் இருக்கின்றனர். கினியா பிக் என்று குறிப்பிடும் எலிகள் அதிகம் வளர்க்கப்படுகின்றன. எலிகள் அழகாகவும், துருதுருவெனவும் இருக்கும். இவைகள் குழந்தைகளுக்கு பிடித்த செல்லப் பிராணியாக இருக்கின்றனர். வெள்ளி எலிகள், சாம்பல் கலந்த எலிகள் மக்களின் விருப்பத் தேர்வாக உள்ளது.
பிற செல்லங்கள்
இவைகளைத் தவிர்த்தும் பல இக்குவானா, ஃபென்னிக் ஃபாக்ஸ், குவைனே பிக், குக்குரங்கு, ஆப்பிரகன் பிக்மி, சுகர் க்ளைடர், டமரின், டரண்டுலா சிலந்தி, போன்ற ஆபத்தான விலங்குகளும் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன.
காட்டு விலங்குகள் மற்றும் பறவைகள், கடல் வாழ் அரிய உயிரினங்கள், அழிந்து வரும் பட்டியலில் இருக்கும் உயிரினங்களையும் வீடுகளில் வளர்க்க அனுமதியில்லை. மேலும் ஒரு சில வெளிநாட்டு எக்ஸாட்டிக் விலங்குகளை வளர்க்க அரசு தரப்பிடமிருந்து அனுமதி பெற வேண்டும். தர்போது வீடுகளில் நாய்கல் வளர்க்கவும் உரிமம் பெறுவதும் கட்டயமாக்கப்பட்டுள்ளது.