Burb (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 17, சென்னை (Health TIps): நமது உடலில் வாய் வழியாக வெளியேறும் வாயுக்கள் என்பது ஏப்பம் என அழைக்கப்படுகிறது. ஏப்பம் மனித வாழ்க்கையில் சாதாரணமானது எனினும், அவ்வப்போது ஏப்பம் ஏற்படுவது பிரச்சனையாக மாறிவிடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

நாம் சாப்பிடும்போது மெதுவாக சாப்பிடுவது நல்லது. உணவை மென்று விழுங்க வேண்டும். வேகமாக நாம் சாப்பிடும்போது, உணவுடன் காற்றும் சென்று ஏப்பத்தை உண்டாக்கும். அவ்வப்போது கொழுப்புகள் நிறைந்த மற்றும் எண்ணெயில் பொரித்த துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களை எடுத்துகோவத்து அதிக ஏப்பத்திற்கு வழிவகை செய்யும்.

நேரத்திற்கு சாப்பிட வேண்டும்:

நாம் சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருந்தாலும், உடலில் உணவுக்கான இடத்தினை காற்று நிரப்பிக்கொள்ளும். இதனாலும் ஏப்பம் ஏற்படும். உணவை மென்று விழுங்குவதால் செரிமானம் விரைந்து நடக்கும் என்பதால், ஏப்பம் குறையும். Chettinad Puli Kuzhambu Recipe: செட்டிநாடு ஸ்டைல் புளிக்குழம்பு சுவையாக செய்வது எப்படி..? விவரம் உள்ளே..! 

செரிமான கோளாறுகளுக்கு வாய்ப்பளிக்கும்:

நட்ஸ், விதைகளில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் செரிமானத்தை ஊக்குவிக்கும். அதிகளவிலான ஏப்பம் வந்துகொண்டு இருந்தால் வயிற்றில் புண் இருக்கிறது என்பது பொருள்படும். இதனால் கடுமையான வயிற்று வலியும் ஏற்படும். நெடுநாட்களாக மனஅழுத்தம், உறக்கமின்மை, சோகம், மனஇறுக்கம் போன்றவையும் செரிமானக்கோளாறுகளை ஏற்படுத்தும்.

அவ்வப்போது ஏப்பம் ஏற்படுவது, வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிற அறிகுறியுடன் ஏப்பம் வந்தால், அது உங்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் பட்சத்தில், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.