Sports Bra (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 21, சென்னை (Chennai News): சம்மரில் ஆரோக்கியம் சார்ந்த அனைத்திலுமே அதிகம் அவனம் செலுத்த வேண்டும். வெயிலின் தாக்கத்தால் உடலில் அதிகப்படியான வியர்வை இது சருமத்திலும் ஆடைகளிலும் படிவதால் சரும பாதிப்புகள் ஏற்படுகிறது. குறிப்பாக இதனால் அந்தரங்கப் பகுதிகளின் சருமம் விரைவில் பாதிக்கப்படுகிறது. இவைகளை ஆரம்பத்தில் கவனிக்காமல் விட்டால் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும். கோடைகாலத்தில் உள்ளாடைகள் பயன்படுத்துகையில் எந்த வகை துணியால் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை கவனித்து வாங்க வேண்டும். சம்மருக்கு பருத்தி துணியே ஏற்றதாக உள்ளது. இது வியர்வையை உறிஞ்சிக் கொள்கிறது. மேலும் ஆடைகள் வெளிர் நிறங்களிலே இருக்கட்டும். அடர் நிற ஆடைகள் வெப்பத்தை உள்ளிழுத்து வியர்வையை அதிகப்படுத்திவிடும். Hair Serum: அசுர வேகத்தில் முடி வளர உதவும் ஹேர் சீரம்.. கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க.!

கோடைகாலத்தில் உள்ளாடைப் பாரமரிப்பு:

  • உள்ளாடைகளை துவைக்கும் போது சோப்பு நுரை முழுவதும் நீங்கும் படி அலசி துவைக்க வேண்டும். இல்லையெனில் ஆடை அணியும் போது சோப்பில் உள்ள இரசாயனங்கள், வியர்வையுடன் கலந்து சருமத்தில் தங்கையில் சருமத்தை விரைவில் சேதமாக்கிவிடும். மேலும் நன்கு வெயிலில் காய வைத்து பின்னரே பயன்படுத்த வேண்டும்.
  • உள்ளாடைகளை மற்ற துணிகளுடன் சேர்த்து துவைக்கக்கூடாது. இதில் உள்ள கிருமிகள் மற்ற ஆடைகளுடன் சென்று விடும். கைகளில் தனியாக துவைப்பது தான் நல்லது. மேலும் வேலைப்பாடுகள் நிறைந்த உள்ளாடைகளை வியர்வையை சருமத்தில் படியவைக்கும். பனியன் மற்றும் லேஸ் போன்ற உள்ளாடைகளை கோடையில் தவிர்த்து பருத்தி, பிளைன் உள்ளாடைகள் அணிவது நல்லது.
  • எப்போதும் பயன்படுத்தும் உள்ளாடைகள் மற்றும் மாதவிடாய் நாட்களில் தனி உள்ளாடைகள் என 2 வகைகளில் தனித்தனியாக பயன்படுத்த வேண்டும். துவைத்து வெயிலில் நன்கு காய்ந்த பிறகு உபயோகிக்க வேண்டும். மேலும் மாதவிடாய் நாட்களில் உள்ளாடைகளை ஒரு நாளில் குறைந்தது 2 முறையாவது கட்டாயம் மாற்றிவிட வேண்டும்.
  • இரவில் தூங்கும் போது உள்ளாடைகள் அணிய தேவையில்லை. தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது சருமத்திற்கு காற்றோட்டத்தை அளிக்கும். இரவில் தூங்கப்போகும் முன் குளிப்பது சருமத்தில் உள்ள அழுக்களை நீக்கி தொற்றுகள் வராமல் பாதுகாக்கும்.