Nipah Virus (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 17, சென்னை (Health TIps): கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த 2018-ம் ஆண்டு நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. முதன் முதலில் நிபா பாதித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மரணமடைந்தனர். தொடர்ந்து அந்த சமயத்தில் மொத்தம் 17 பேர் மரணமடைந்தனர். அதன்பிறகு கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் மீண்டும் பரவியது. அப்போது 2 பேர் மரணமடைந்தனர். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதித்து சிகிச்சையில் இருந்த நிலையில் மரணமடைந்தான். இந்நிலையில் கேரளாவில் நிஃபா வைரஸ் பாதிக்கப்பட்டு 22 பேர் பலியாகி உள்ளனர். மலப்புரத்தில் நிபா வைரஸ் தொடர்பு பட்டியலில் 175 பேர் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

நிபா வைரஸ்: நிபா வைரஸ் (Nipah Virus) என்பது ஜூனோடிக் வைரஸ் ஆகும். இது வௌவால்கள் உள்ளிட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. இது பன்றிகளைப் பாதித்து, அதன் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது. இதனால் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படலாம். நிபா வைரஸ் அசுத்தமான உணவு மூலம் மற்றவர்களுக்குப் பரவுகிறது. மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் முதலில் நிபா வைரஸ் பாதித்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. World Patient Safety Day 2024: ஒவ்வொரு நாளும் கூடும் கர்ப்பிணி பெண்கள் மரணம்.. உலக நோயாளி பாதுகாப்பு தினம்.!

அறிகுறிகள் (Symptoms):

  • காய்ச்சல்
  • தலைவலி
  • சுவாசக் கஷ்டங்கள்
  • இருமல் மற்றும் தொண்டை புண்
  • வயிற்றுப்போக்கு
  • வாந்தி
  • வலிப்பு

இந்த பாதிப்புகள் 4 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை இருக்கும். சில அரிய கேஸ்களில் இது 45 நாட்கள் வரை கூட இருக்கலாம்.

சிகிச்சை முறைகள் (Diagnosis & Treatment): நிபா வைரஸ் தொற்றுக்குக் குறிப்பிட்ட சிகிச்சை அல்லது தடுப்பூசிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பன்றிகள் மற்றும் வௌவால்களை அழிப்பது மற்றும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டோர் தனிமைப்படுத்துவது ஆகியவை மட்டுமே நிபா வைரஸ் பாதிப்பைக் குறைக்கும் நடவடிக்கைகள் ஆகும். மேலும் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வரவும், முகக் கவசம் அணியும்படியும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. Nipah Virus: நிபா வைரஸ் மரணம் எதிரொலி; உஷார் நிலையில் தமிழ்நாடு - கேரளா எல்லை.. சோதனைகள் தீவிரம்.!

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

  • நீங்களோ / உங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கோ நிபா வைரஸ் அறிகுறி தென்பட்டால், உங்களுக்கு அருகாமையில் உள்ள சுகாதார மையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
  • கைவிடப்பட்ட கிணறுகள், நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்
  • நோய் வாய் பட்டவர்கள் பயன்படுத்தும் படுக்கை உள்ளிட்ட எந்த பொருட்களையும் தொடுவதை தவிர்க்க வேண்டும்.
  • கள் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
  • நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும்.
  • தொற்று பாதிப்பு உடையவர்களுடன் தொடர்பு கொண்ட பிறகு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். உதாரணமாக சோப்பு மற்றும் தண்ணீரை பயன்படுத்தியோ அல்லது ஆல்கஹால் கலந்த கைசுத்திகரிப்பான்களை பயன்படுத்தியோ கழுவலாம்.
  • வௌவால்கள் மற்றும் பன்றிகளின் எச்சில் மற்றும் எச்சங்களின் வழியே நிபா வைரஸ் மனிதர்களுக்கு பரவும் அபாயம் இருப்பதால் விலங்குகள் சாப்பிட்ட பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.