Vitamin D (Photo Credit: Pixabay)

ஜனவரி 09, சென்னை (Chennai): நமது உடலின் இயக்கத்திற்கு வைட்டமின்கள், தாது சத்துக்கள் என பல்வேறு விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. இதில் வைட்டமின் டி செயல்பாடு உடலை மட்டுமல்லாது, உடலின் எலும்புகளுக்கு மிகப்பெரிய ஆதாரமாக இருக்கிறது. இதனால் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் எலும்புகள் வலுவிழக்கும். வயதான பின்னர் உடலில் ஏற்படும் வைட்டமின் டி குறைபாடு காரணமாகவே எலும்பு முறிவு எளிதில் ஏற்படுகிறது. வைட்டமின் டி குறைபாடுகளை சில அறிகுறிகள் வாயிலாக எளிதில் கண்டறியாகவும் செய்யலாம். Weight Loss Tips: உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கீகளா? உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.! 

அறிகுறிகள் & காரணங்கள்:

அளவுக்கு அதிகமான உடற்சோர்வு, வேலையில் கவனம் இல்லாதது, சுறுசுறுப்புடன் வேலை செய்ய இயலாதது, சாதாரணமாக கீழே விழுந்தாலும் எளிதில் எலும்பு முறிவு ஏற்படுதல், மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு எலும்பு தேய்மானம் போன்றவை இதன் அறிகுறிகளாக கவனிக்கப்படுகிறது. மேலும், சூரிய ஒளி குறைவான இடத்தில அதிக நேரம் வேலை பார்ப்பது, அளவுக்கதிகமான சன்ஸ்கிரீன் பயன்பாடு, இயற்கையாக மெலனின் உற்பத்தி அதிகம் கொண்ட நபர்களுக்கும் வைட்டமின் டி குறைபாடு ஏற்படும்.

தவிர்க்கும் வழிமுறைகள்:

உயரமான கட்டிடத்தில், சூரிய ஒளி கிடைகாத இடத்தில் பணியாற்றி வரும் நபர்களும் வைட்டமின் டி பிரச்சனையால் பாதிக்கப்படலாம். வைட்டமின் டி உடலில் இருந்தால் மட்டுமே எலும்புகள் ஆரோக்கியத்துடன் இருக்கும். இதனால் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். வைட்டமின் டி அதிகரிக்க காளான், இறால், பால், ஆரஞ்சு ஆகியவற்றை சுழற்சி முறையில் எடுத்துக்கொள்ளலாம்.

குறிப்பு: மேற்கூறிய அறிகுறிகள் / தகவல்கள் பொதுவானவையே. உங்களுக்கு அதுசார்ந்த உடல்நலக்குறைவு / உடல் ஆரோக்கியம் தொடர்பாக சந்தேகம் இருப்பின், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம். அவரின் அறிவுறுத்தலின் பேரில் தேவைப்பட்டால் உடல் பரிசோதனை செய்து, மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப செயல்படலாம்.