Weight Loss (Photo Credit: Pixabay)

ஜனவரி 06, சென்னை (Health Tips): இன்றளவில் உடற்பருமன் பிரச்சனை காரணமாக பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் உடல் எடையை கட்டுக்குள் வைக்க முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதற்காக சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படும் எடை குறைப்புக்கான யுக்தி, ஆலோசனைகளை சுயமாக முடிவெடுத்து பின்பற்றி வருகின்றனர். மேலும், இவ்வாறான முயற்சிகளை சரிவர கடைபிடிக்க இயலாமலும், உடற்பயிற்சி நிபுணரிடம் ஆலோசிக்காமல் செயல்படுத்தப்படுவதால் பக்கவிளைவுகளையும் எதிர்கொள்கின்றனர். இன்று அதுகுறித்த விளக்கமான விபரங்களை நாம் தெரிந்துகொள்ளலாம்.

உணவு தவிர்க்கப்படல்:

உடல் எடையை குறைக்க முதலில் உணவை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. இது வளர்சிதை மாற்றத்தை மந்தப்படுத்தும். ஒருவேளை உணவு சாப்பிடாமல் இருந்தால், அடுத்த வேளையில் அதிக உணவு சாப்பிட தூண்டல் ஏற்படும். நாளடைவில் இது உடல் பருமனை அதிகரிக்கும். குறைக்க வழிவகை செய்யாது. சுறுசுறுப்புடன் சமச்சீர் உணவுகளையும், ஆரோக்கியமான சிற்றுண்டிகளையும் சாப்பிடுவது சாலச்சிறந்தது.

அதிகமாக சாப்பிடுதல்:

உடல் வளர்ச்சிக்கும், திடகாத்திர தன்மைக்கும் சத்தான உணவுகள் முக்கியம் எனினும், அதனை அளவுக்கு அதிகம் என்ற நிலையில் எடுத்துக்கொள்வது நல்லது கிடையாது. பாதம், முந்திரி, வால்நட், அவகேடா, முழு தானியங்கள் ஆரோக்கியமானது, ஊட்டச்சத்துக்களை வாரி வழங்கும் எனினும், அதனை அளவுடன் உட்கொள்ளல் வேண்டும். அதிகம் உண்டால் உடல்பருமன் விஷயத்தில் அவையே எதிர்வினையாற்றும். Andhra Style Green Chili Chutney: காரசாரமான ஆந்திரா ஸ்டைல் பச்சை மிளகாய் சட்னி செய்வது எப்படி..?

கடினத்தன்மை உடற்பயிற்சியை புறக்கணித்தல்:

ஆண்களும் சரி, பெண்களும் சரி.. ஒருசிலர் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபடும்போது கார்டியோ பயிற்சியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்கள். பளுதூக்குதல் உட்பட சில கடின பயிற்சியை புறந்தள்ளி வருகின்றனர். உடற்பயிற்சியில் சமமான அளவு பயிற்சி மேற்கொள்ளுதல் அவசியம். இது தசையை கட்டமைத்தல், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுதல், உடல் எடையை பராமரிக்க வழிவகை செய்தல் போன்ற நன்மைகளை வழங்கும்.

நிபுணர்களின் ஆலோசனையை புறந்தள்ளுதல்:

உடல் எடையினை கட்டுப்படுத்த நினைப்போர், அதற்கான நிபுணரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். அவரவரின் உடல் எடை, உயரம், வாக்கு போன்ற பல்வேறு காரணிகளை பொறுத்து, அவர்கள் அதற்கான உடற்பயிற்சியை அமைத்துக்கடுப்பார்கள். அதன் வழிகாட்டுதலின் பேரில் நாம் செயல்பட்டால், விரைந்து உடல்நலம் குறைந்துவிடும். அதுபோல, உடல் எடையை குறைக்கும் விஷயங்களில் எட்ட இயலாத உடனடி இலக்குகளை நிர்ணயம் செய்ய வேண்டாம். அது ஏமாற்றத்தை தரவல்லது என்பதால், அடையக்கூடிய இலக்கை நிர்ணயம் செய்து செயல்படலாம்.

உடலின் சமிக்கையை கவனியுங்கள்:

நமது உடல் பசி, உணவு சாப்பிடும்போது போதும் என்ற அளவு ஆகியவற்றை வழங்கும். அதனை கண்காணிப்பது முக்கியமானது. நேரத்திற்கு சரியாக ஆகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். வேலை, அழுத்தம் என உணவை தவிர்த்தல் அறவே கூடாது. லேசான பசியின்போதே உணவை எடுக்க தொடங்க வேண்டும். அதிகம் சாப்பிடும்போது திருப்தி உணர்வு ஏற்பட்டதும், அதனை நிறுத்துவது நல்லது.