Varalakshmi Vratam 2024 (Photo Credit: Wikipedia / Team LatestLY)

ஆகஸ்ட் 12, சென்னை (Chennai): Varalakshmi Vratam Wishes WhatsApp Status Messages, HD Wallpapers, Quotes and SMS To Share on Varalakshmi Vratam 2024:

நாம் கேட்ட வரங்களை மட்டுமல்லாது, கேட்காத வரங்களையும் குவிக்கும் அன்னையான வரலட்சுமி (Varalakshmi), அவரை வணங்கியோருக்கு சகலவிதமான நன்மையை தருபவர். இந்த விரதத்தை கடைபிடிக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிக்கப்படும், செல்வம், தைரியம், வெற்றி, கல்வி, பதவி, குழந்தைப்பேறு என அனைத்து விதமான நன்மையையும் கிடைக்கும். சித்திரநேமி என்று அழைக்கப்படும் கண தேவையானவர், வரலட்சுமி விரதத்தை (Varalakshmi Vratam) அனுஷ்டித்து குஷ்ட ரோகம் எனப்படும் தொற்றுநோய் நீங்கப்பெற்றார் என்பது ஐதீகம்.

புராணம்:

சாருமதி என்ற பெண்மணி மகத நாட்டில் உள்ள ஊரில் வசித்து வந்தார். இவர் தனது கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரணமாக கருதாமல், இறைவனாக எண்ணி பணிவிடை செய்து வந்துள்ளார். அவரின் மனசாட்சி மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியை வழங்கவே, மகிழ்ச்சியடைந்த தேவி, ஓர்நாள் இரவில் சாருமதியின் கனவில் தோன்றி தன்னைத் துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்வோரின் இல்லத்தில் நான் இருப்பேன் என்று கூறி, விரதத்திற்கான வழிமுறையையும் எடுத்துரைத்து கனவில் இருந்து விடுபட்டார். இந்த பலனை ஒவ்வொருவருக்கும் சொல்லும் சிறப்புமிக்க பணியையும் லட்சுமி தேவி சருமதியிடம் ஒப்படைக்க, தேவியின் எண்ணப்படி அனைத்தும் நடந்தது. சாருமதியும் வரலட்சுமி விரதம் இருந்து பலனை பெற்றார். Tulasi Rasam Recipe: சளி, இருமலுக்கு அருமருந்தாக.. துளசி ரசம் செய்வது எப்படி..? 

சிவன் - பார்வதி:

சிவன் - பார்வதி சொக்கட்டான் ஆடுகையில், யார் வெற்றி அடைந்தார்கள் என்ற சண்டை ஏற்பட்டபோது, நிகழ்விடத்தில் இருந்த கணதேவதை சித்திர நேமியிடம் இருவரும் நியாயம் கேட்டுள்ளனர். அவர் ஒருதலைப்பட்சமாக சிவன் வெற்றி அடைந்ததாக கூறிவிட, பார்வதி ஆத்திரமடைந்து அவனை குஷ்ட ரோகியாக ஒளியிழந்து தவிப்பாய் என சாபமிடுகிறார். இதனால் சித்திர நேமி தாடகக்கரையில் குஷ்ட ரோகியாக வசித்து வருகிறார். இவ்வாறாக பல காலங்கள் சென்றுவிட, அங்கு பூஜை செய்துகொண்டு இருந்த தேவ கன்னிகைகளிடம் விபரத்தை கூறி, அவர்கள் இருக்கும் விரதமுறைகள் குறித்து நேமி கேட்டறிந்தான். அவனின் மீது பரிதாபம் கொண்ட கன்னிகைகளும் வரலட்சுமி விரதம் குறித்து கூறத்தொடங்கியுள்ளனர். தாங்கள் அனுஷ்டிக்கும் வரலட்சுமி விரதத்தை, சூரியன் கடகத்தில் இருக்கும்போது, கங்கை-யமுனை சேரும் காலத்தில் துங்கபத்திரா நதியில், சிராவண (ஆடி) மாதத்தில் சுக்லபட்சத்தில் வெள்ளிக்கிழமை, முறைப்படி மகாலட்சுமியை வேண்டுமாறும் எடுத்துரைத்துள்ளார். பின் வரலட்சுமியை மனமுருகி வேண்டிய சித்திர நேமி, தனது குஷ்டம் நீங்கி கைலாயம் சென்றடைந்தார் என்பது ஐதீகம். அன்னை பார்வதிதேவியும் விரதமிருந்து சண்முகரை பெற்றார். விக்கிரமாதித்தனுக்கு நந்தனிடம் இருந்து ராஜ்ஜியம் கிடைத்தது, நந்தனின் மனைவி பிள்ளைப்பேறு அடைந்தார்.

செய்யவேண்டியது என்ன?

வரலட்சுமி விரதம் மேற்கொள்ளவேண்டிய நன்னாளில் நாம் புனித நதிகளில் நீராடுவது கூடுதல் நன்மை தரும். புனித நதியில் நீராடுவதால் ஓராண்டுக்கான லட்சுமி வழிபாடு பலன்கள் கிடைக்கும். வரலட்சுமி விரத நாளில் சுமங்கலிப்பெண்கள் மஞ்சள், குங்குமம் கொடுத்து வணங்க நல்லது. வரலட்சுமியை தாமரை மலர்கள் கொண்டு அலங்கரிக்கலாம். இதனால் புண்ணியம் வந்துசேரும். மகாலட்சுமிக்கு பிரியமான மஞ்சள் நிறத்திற்கு கொண்டு வழிபடுவது நல்லது. அனைவர்க்கும் நன்மை தரும் லட்சுமி வழிபாட்டின்போது, அஷ்டலட்சுமி மந்திரம் சொல்லி வழிபடுவது நன்மை தரும். விரத நாளில் சோறு, பருப்பு, வடை பாயசம், கொழுக்கட்டை, அப்பம், இட்லி, பழங்கள் போன்றவற்றை கொண்டு நைவேத்தியம் செய்வது நல்லது. அருகம்புல்லையும் வைத்து வழிபட வேண்டும். Thengai Paal Kozhukattai Recipe: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் தேங்காய் பால் கொழுக்கட்டை செய்வது எப்படி..? 

வரலட்சுமி விரதத்தின் பலன்கள்:

வரலட்சுமி விரதத்தின்போது சந்தனத்தில் லட்சுமி செய்து வழிபடுதல் நல்லது. இவ்வாறு வழிபடும் பட்சத்தில், மறுநாள் அதனை நீர்நிலையில் கரைக்க வேண்டும். புண்ணிய நதியில் நீராடுவது நல்லது. தாமரை மலர்கள் கொண்டு வரலட்சுமியை அலங்கரித்து வழிபடுதல் புண்ணியத்தை சேர்க்கும். வரலட்சுமி விரதத்தை மேற்கொண்டு இருப்பவருக்கு, வைகுந்தம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. செல்வா செழிப்புடன் ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்க, குடும்பம் தழைத்தோங்க, சௌபாக்கிய வாழ்க்கை கிடைக்க, நல்ல வேலை & பதவி உயர்வு கிடைக்க, இழந்த பதவியை மீட்க, வரலட்சுமி விரதம் பெரிதும் உதவுகிறது. வரலட்சுமி விரதம் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தை கைகூட வழிவகை செய்யும், திருமணமானவர்களுக்கு மாங்கல்ய பலத்தை அதிகரிக்கும்.

வரலட்சுமி நோன்பு 2024:

2024ம் ஆண்டுக்கான வரலட்சுமி விரதம் என்பது 16 ஆகஸ்ட் 2024 அன்று சிறப்பிக்கப்படுகிறது. அன்றைய நாளில் விரதம் இருந்து பூஜை செய்து வழிபாடு நடத்த நல்ல நேரமாக காலை 12:15 மணிமுதல் 01:15 மணிவரை கணிக்கப்பட்டுள்ளது. மாலை 04:45 மணிமுதல் 05:45 மணிவரை கணிக்கப்பட்டுள்ளது. இந்த நேரங்களில் வரலட்சுமி விரதத்திற்கான பூஜையை பக்தர்கள் மேற்கொள்ளலாம்.