மார்ச் 30, சென்னை (Kitchen Tips): சாம்பார்களில் பலவகையான சமையல்கள் உள்ளன. இருப்பினும் செட்டிநாடு சாம்பார் மட்டும் தனி சுவைதான். அந்த ருசியான செட்டிநாடு சாம்பார் எப்படி சமைப்பது என்பது பற்றி இதில் பார்க்கலாம். Mother And Daughter Suicide: 13 வயது பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை – அதிர்ச்சியில் தாயும் தற்கொலை..!
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1 கப்
உளுத்தம் பருப்பு - 2 கரண்டி
குழம்பிற்கு தேவையான காய்கறிகள் - 200 கிராம்
தக்காளி - 4
பெரிய வெங்காயம் - 2
மஞ்சள் தூள் - அரை கரண்டி
சாம்பார் பொடி - 4 கரண்டி
புளி - சிறிதளவு
வெந்தயம் - அரை கரண்டி
கடுகு - ஒரு கரண்டி
பெருங்காயம் - ஒரு கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில், துவரம் பருப்பை மஞ்சள்தூள் கலந்து, நன்கு வேகவைத்து கொள்ள வேண்டும். பிறகு 3 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளி, வெங்காயம், காய்கறிகளை வேக வைத்துக்கொள்ளவும். காய்கறிகள் வெந்த பிறகு அதில் புளியை தண்ணீரில் கரைத்து அதனுள் ஊற்றவும். அதனுடன், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். பின்னர், வேகவைத்த பருப்பை அதனுடன் சேர்க்கவும். நன்கு கொதித்து வரும் வேளையில், வேறொரு பாத்திரத்தில் எண்ணையை காயவைத்து அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை தாளித்து கொள்ள வேண்டும். தாளித்ததை அதனுடன் சேர்த்து கொட்ட வேண்டும். இதோ, சுவையான செட்டிநாடு சாம்பார் ரெடி.