Apple Halwa (Photo Credit: YouTube)

ஏப்ரல் 04, சென்னை (Kitchen Tips): நாம் பொதுவாக எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளுக்கும் இனிப்பு சேர்த்து கொள்வது வழக்கம். அந்தவகையில், நாம் வீட்டிலேயே செய்து சமைத்து சாப்பிடுவதற்காக தித்திக்கும் சுவையில் ஆப்பிள் அல்வா செய்வது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். Homemade Bomb Blast: நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு; குண்டு வெடித்து சிதறியதில் 17 வயது சிறுவனின் இரு கைகள் பறிபோனது – 3 பேர் படுகாயம்..!

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் - 4

பால்கோவா - 1 கப்

நெய் - அரை கப்

சர்க்கரை - 1 கப்

முந்திரிப்பருப்பு, பாதாம் - 2 கரண்டி

ஏலக்காய்த்தூள் - 2 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் ஆப்பிளை நன்றாக கழுவி, அதனை தோல் சீவி துருவி வைத்துக்கொள்ளவும். பின், ஒரு கடாயில் நெய்யை ஊற்றி உருகியதும், அதில் முந்திரிபருப்பை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின்பு, அதோடு துருவி வைத்த ஆப்பிளை சேர்த்து சிறிது நேரம் கிளறிவிட வேண்டும். முக்கால்வாசி வெந்த பிறகு, பால்கோவா, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். சற்று இளகிய நிலையில் வரும்போது, வறுத்து வைத்திருந்த முந்திரி, பாதாம், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு கடாயை கீழே இறக்கி வைக்கவும். தித்திக்கும் சுவையான ஆப்பிள் அல்வா ரெடி.