நவம்பர் 16, சென்னை (Cooking Tips Tamil): தென்னிந்திய மக்களின் சமையலில் இன்றியமையாத ஒன்றாக கறிவேப்பிலை விளங்குகிறது. கறிவேப்பிலையில் உள்ள சத்துக்கள் உடல்நல பாதுகாப்பிற்கும், முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. இதனை தனியாகவும் அல்லது குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். இதனுடன் வெங்காயம் சேர்த்து குழம்பு வைக்கும்போது தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் சரியாகும். இன்று கறிவேப்பில்லை - வெங்காய குழம்பு செய்வது எப்படி என காணலாம். Pallipalayam Chicken: சண்டே ஸ்பெஷல்.. பள்ளிபாளையம் சிக்கன் செய்வது எப்படி?.. வீட்டிலேயே சுவையாக செய்து அசத்துங்கள்.!
தேவையான பொருட்கள்:
விழுது செய்ய தேவையானவை:
கொழுந்து கறிவேப்பில்லை - கையளவு
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
மல்லி விதை - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
குழம்புக்கு தேவையானவை:
சின்ன வெங்காயம் - 7
நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
பூண்டு பற்கள் - 5
கடுகு, வெந்தயம், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
பெருங்காயத்தூள் - சிறிதளவு
புளி - எலுமிச்சை பழ அளவு
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
- முதலில் சின்ன வெங்காயம், பூண்டு தோல் நீக்கி எடுத்துக்கொள்ளவும். எலுமிச்சம்பழ அளவு புளியை நீரில் சேர்த்து ஊற வைக்கவும்.
- பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் விழுது செய்ய தேவையானவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
- இவை வதங்கியதும் ஆற வைத்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். அடுத்து ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, சின்ன வெங்காயம், பெருங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு பொன்னிறமானதும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
- இதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- இறுதியாக மஞ்சள் தூள், புளிக்கரைசல், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு கெட்டியானதும் இறக்கி சுடசுட பரிமாறலாம்.