ஏப்ரல் 17, சென்னை (Kitchen Tips): உடலுக்கு பல நன்மைகளை அளிக்கக்கூடிய, ஆரோக்கியம் நிறைந்த சத்தான வாழைப்பழத்தை கொண்டு எப்படி வாழைப்பழ குழிப்பணியாரம் செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் - 4

அரிசி மாவு - அரை கப்

கோதுமை மாவு - 2 கப்

நாட்டு சர்க்கரை - 1 கப்

ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு. Teenager Arrested For Stashing Cocaine At Home: ரூ.12 லட்சம் மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்; வாலிபர் கைது..!

செய்முறை:

முதலில் வாழைப்பழத்தின் தோலை நீக்கி மிக்ஸியில் போட்டு, அதனுடன் அரிசி மாவு, கோதுமை மாவு, நாட்டு சர்க்கரை, ஏலக்காய்த்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் நன்கு அரைத்து கொள்ளவும். இவற்றை ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி பத்து நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும். பின்னர், அடுப்பில் குழிப்பணியார கல்லை வைத்து சூடேற்றி, சிறிது எண்ணெய் ஊற்றி அதில் நாம் அரைத்து ஊறவைத்த மாவினை குழிகளில் ஊற்றி மூடி வைக்க வேண்டும். பிறகு இரண்டு நிமிடங்கள் கழித்து, பணியாரத்தை திருப்பிபோட்டு வேகவைக்கவும். இரண்டு பக்கங்களும் வெந்த பிறகு, இதனை ஒரு தட்டில் வைத்து அனைவரும் சாப்பிட வேண்டும். சுவையான வாழைப்பழ குழிப்பணியாரம் ரெடி.