மே 06, சென்னை (Kitchen Tips): பேரீச்சம் பழங்களில் அதிகமான நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் இயற்கையான இனிப்புச் சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. இவை நமக்கு சிறந்த ஆற்றலை அளித்து, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் பல வகைகளில் நல்ல பலனை தருகிறது. அந்த வகையில், சுவையான பேரீச்சம் பழம் அல்வா (Dates Halwa) எப்படி செய்வது என்பதனை இதில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பேரீச்சம் பழம் - 300 கிலோ கிராம்

பாதாம் - 10

கடலை பருப்பு - ஒரு கப்

பால் - 4 கப்

நெய் - 3/4 கப்

சர்க்கரை - 4 கரண்டி

ஏலக்காய் தூள் - ஒரு கரண்டி. 14-year-old Girl Kills Brother In Chhattisgarh: "இனி போன் யூஸ் பண்ணாத.." என்ற அண்ணன்.. கடுப்பில் கோடரியால் வெட்டி கொன்ற தங்கை.. சத்தீஸ்கரில் பரபரப்பு..!

செய்முறை:

முதலில் கடலை பருப்பை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, அந்த தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக, ஒரு அடிகனமான கடாயில் 4 கப் பால் சேர்த்து, கடலை பருப்பை வேக வைக்கவும். பின்னர், வேகவைத்த கடலை பருப்பை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, பேரீச்சம் பழத்தை (Pericham Pazham Halwa) 1 கப் சூடான பாலில் ஊறவைத்து, மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைக்கவும். இதனையடுத்து, ஒரு சிறிய கடாயில் நெய் சேர்த்து, பாதாம் பருப்பை பொன்னிறமாக வரும் வரை வறுத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதே கடாயில் அரைத்து வைத்த கடலை பருப்பு கலவையை கலந்து நன்கு கிளறி விடவும். பிறகு பாலுடன் அரைத்து வைத்துள்ள பேரீச்சம் பழ கலவையை சேர்த்து மிதமான சூட்டில் பத்து நிமிடங்கள் வரை நன்கு கிளறிவிட வேண்டும். இதில் ஏலக்காய் பொடி சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும். பின்னர், கொதிக்க விட்டு கிளறி அடுப்பை அணைத்து, பின் இறக்கினால் சுவையான பேரீச்சம் பழம் அல்வா ரெடி.